மதுபோதையில் பொலிஸாரை தாக்கிய மூவர் விளக்கமறியலில்!

5shares
Image

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸார் ஒருவரை தாக்கி காயப்படுத்தியதோடு, அவர்களின் கடமையை செய்ய விடாது இடையூறு விளைவித்த மூவரை இம்மாதம் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் துசித்த தம்மிக்க செவ்வாய்கிழமை (12) உத்தரவிட்டார்.

வென்ராசன்புர,கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 25, 30, மற்றும் 33 வயதுடைய மூவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர்கள் மூவரும் சாராயம் குடித்து விட்டு முச்சக்கர வண்டியில் சென்ற போது வீதிப் பாதுகாப்பு கடமையில் நின்ற பொலிஸ் உத்தியோகத்தர் முச்சக்கர வண்டியை நிறுத்தி அனுமதிப்பத்திரங்களை சோதனை மேற்கொண்ட போதே மூவரும் இணைந்து தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காயங்களுக்குள்ளான பொலிஸ் உத்தியோகத்தர் கந்தளாய் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிப்பதோடு, சந்தேக நபர்களை பொலிஸார் திங்கட்கிழமை (11) கைது செய்துள்ளதோடு பொலிஸார் கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இதையும் தவறாமல் படிங்க
`