வடகிழக்கு பிரிமியர் லீக் கால்பந்தாட்டத் தொடரின் 8 ஆவது போட்டியில் மன்னார் மாதோட்டம் எப்.சி அணி அபார வெற்றி!

8shares
Image

வடகிழக்கு பிரிமியர் லீக் கால்பந்தாட்டத் தொடரின் 8 ஆவது போட்டியில் மன்னார் மாதோட்டம் எப்.சி அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.

அம்பாறை அவென்ஞர்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் 8 க்கு 0 என்ற கோல் கணக்கில் மாதோட்டம் எப்சி அணி வெற்றியீட்டியது.

வடகிழக்கு பிரிமியர் லீக் கால்பந்தாட்ட தொடரின் 8 ஆவது போட்டியில் மன்னார் மாதேட்டம் எப்.சி அணியும் அம்பாறை அவென்ஞர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தியிருந்தன.

யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் மின்னொளியின் கீழ் இடம்பெற்ற இந்த போட்டியில் ஆரம்பம் முதலே மன்னார் மாதோட்டம் எப்.சி அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

ஆட்டத்தின் முதல் பாதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மன்னார் மாதோட்டம் அணி, 4 கோல்களை போட்டு அசத்தியது.

இதைத் தொடர்ந்து 2 ஆவது பாதி ஆட்டத்தில் தொடர்நது அதிரடியாக விளையாடிய மன்னார் அணி, அம்பாறை அணியின் கோல் அடிக்கும் தகர்த்தது.

அத்துடன், தொடர்ந்து 4 கோல்களை போட்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுததியது.

இதன் மூலம் 8க்கு 0 என்ற கோல் கணக்கில் மன்னார் மாதோட்டம் எப்.சி அணி அபார வெற்றியை பதிவு செய்தது.

இந்த போட்டியின் ஆட்டநாயகனான மன்னார் மாதோட்டம் எப்சி அணியின் சார்பில் 4 கொல்களை அடித்த ஜோன்சன் தெரிவு செய்யப்பட்டார்.

இதேவேளை, இந்த தொடரின் 9 ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இந்த போட்டியில் கிளியூர் கிங்ஸ் மற்றும் வல்வை எப்சி ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
`