பாவப்பட்ட பணத்திற்கே நேர்ந்த பரிதாபம்; பொலிஸார் அதிர்ச்சி!

  • Shan
  • June 13, 2018
147shares

வடக்கு மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் தவராசாவின் படலையில் கட்டித் தொங்கவிடப்பட்ட பாவப்பட்ட பணத்தில் ஒருதொகுதி நாணயக் குற்றிகள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் சேர்க்கப்பட்ட குறித்த பணமுடிச்சு தவராசாவின் வீட்டுப் படலையில் நேற்றைய தினம் கட்டப்பட்டமை தெரிந்ததே. இந்த நிலையில் இதுகுறித்து தவராசாவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

குறித்த முறைப்பாட்டிற்கு அமைய ஸ்தலத்திற்கு வந்த பொலிஸார் குறித்த பண முடிச்சை மீட்டுச் சென்றனர். பணத்தை எண்ணிப்பார்த்தபோது அங்கு தொள்ளாயிரத்து அறுபத்துமூன்று ரூபா பணம் காணாமல் போயுள்ளமை தெரியவந்தது.

எவ்வாறாயினும் நேற்றைய தினம் வடக்கு மாகாணசபையிடம் குறித்த பணம் ஒப்படைக்கப்பட்டபோது அவைத்தலைவரால் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
`