யாழ்ப்பாணம்-கண்டி பேருந்து உள்ளே காத்திருந்த அதிர்ச்சி!

  • Shan
  • June 13, 2018
634shares

யாழில் இருந்து கண்டி நோக்கி புறப்பட்ட அரச பேருந்து ஒன்றிலிருந்து இன்றைய தினம் கேரள கஞ்சாவுடன் இலங்கை போக்குவரத்துச் சபை ஓட்டுநர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இன்று மதியம்12 மணியளவில் வவுனியா புதிய பேருந்து நிலயத்திற்கருகில் குறித்த பேருந்தை வழிமறித்த வவுனியா பொலிஸ் நிலைய போதை தடுப்பு பிரிவினர் அங்கு சந்தேகத்திடமான பொதியை சோதனை செய்துள்ளனர். இதன்போது 1.750 கிலோ கிராம் கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.

அதனை உடைமையில் மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மட்டகளப்பு வாழைச்சேனைப் பகுதியைச் சேர்ந்த மேற்படி ஓட்டுநர் ஸ்தலத்திலேயே கைது செய்யப்பட்டார்.

பின்னர் குறித்த பேருந்து வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லபட்டதுடன் விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டது.

கைது செய்யபட்ட ஓட்டுநர் பணி விடுமுறையில் இருந்ததாக தெரிவித்த பொலிசார், நாளைய தினம் சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக கூறினர்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க