நல் ஆட்சி அரசா?, இந்துக்களின் கொல் ஆட்சி அரசா இந்த அரசு? அரசைக் கடுமையாகச் சாடும் இந்து அமைப்புக்கள்!

18shares
Image

இந்துக் கலாசார அமைச்சுக்குள் புற்றுநோயைக் கருவைப் புகுத்தி அணு அணுவாக இந்துக்களை வதைப்பதைவிட, இந்துக் கலாசார அமைச்சை இழுத்து மூடுங்கள். நல் ஆட்சி அரசா?, இந்துக்களின் கொல் ஆட்சி அரசா இந்த அரசு? என்று அரசைக் கடுமையாகச் சாடியுள்ளன இந்து அமைப்புக்கள்.

இந்து விவகார பிரதி அமைச்சராக காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிட்டபோதே அவை இவ்வாறு குறிப்பிட்டன.

இது தொடர்பில் சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்தபோது:-

"இலங்கையில் இந்துக் கலாசார அமைச்சுக்கு முதலாக இசுலாமியரைத் துணை அமைச்சராக்கிய கொடுமையை இந்துக்களை நசுக்கும் முயற்சியாகவே பார்க்கிறோம். துணை அமைச்சர் நீறணிந்து சந்தனமிட்டுச் சிவராத்திரி விழாவுக்கு வருராவாரா?

ஏனைய சமயத் தவர்களைக் காபீர்கள் (நீசர்கள்) எனக் கற்றவர், உருவ வழிபாட்டையே ஒத்துக்கொள்ளதவர், இந்துக்களை இசுலாமுக்கு மத மாற்றுவதையே இலக்காகக் கொண்ட குழு சார்ந்தவர், இந்துக்கள் வழிபடும் மாடுகளைக் கொன்று உண்பவர், இந்து ஒருவர் தன் சட்டைப் பைக்குள்ளேயேனும் இந்துக் கடவுளரின் படத்தை வைத்திருத்தலைக் கொடும் குற்றமாகக் கருதித் தண்டிக்கும் சவுதி அரேபிய நாட்டுக்குப் புனித வழிபாட்டுப் பயணம் மேற்கொள்பவர், மட்டக்களப்புக் கல்லடியில் அம்பாறைக் கல்முனைக்குடியில் இந்துக் கோயில்களின் மேல் இஸ்லாமியப் பள்ளிவாசல்களைக் கட்டியெழுப்பியதை எப்பொழுதும் கண்டிக்காதவர், அத்தகையவர் இந்துக் கலாசார அமைச்சின் துணை அமைச்சர். இதை ஏற்றுக்கொள்ள முடியாது" - என்றார்.

இந்து சமயப் பேரவையின் செயலர் சி.சக்திகிரீவன் தெரிவித்தபோது:-

"மத சுதந்திரம் இருக்கின்றது. அதற்காக வேறு மதத்தவரை இந்துப் பிரதி அமைச்சராக நியமிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

அவருக்கு எமது கலாசாரம், பண்பாடுகள் பற்றி தெரிந்திருக்காது. எமக்கு அவை சார்ந்த தேவைகள் ஏற்படும் போதும் யோசிக்க வேண்டிய சூழ்நிலையே ஏற்படும். சமயம் சார்பான ஒரு ஒழுங்கற்ற நிலை தோன்ற வழியமைப்பதுடன் எம்மவர் மத்தியில் மத ரீதியாக குழப்பநிலை தோன்றவும் வழிவகுக்கும்" - என்றார்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
`