கந்தளாயில் காட்டு யானைகளின் வெறியாட்டம்!

  • Shan
  • June 14, 2018
23shares

திருகோணமலை கந்தளாய் அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கித்துல் ஊற்று பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் காரணமாக வீடொன்று சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்று புதன்கிழமை (13) இரவு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள அதே நேரம், இதனால் வீட்டிலுள்ள தளபாடங்கள் மற்றும் வீட்டு உபகரணப் பொருட்களும் சேதத்திற்குள்ளாகி இருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த மே மாதமும் இப்பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசத்தால் இரண்டு வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

யானைகளின் தாக்குதல்களுக்கு உள்ளான வீட்டு உரிமையாளர்களுக்கு அரசினால் எந்தவிதமான நஷ்டஈடுகளும் வழங்கப்படவில்லையெனவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
கோத்தபாய தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்! கொந்தளிக்கிறது தென்னிலங்கை!

கோத்தபாய தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்! கொந்தளிக்கிறது தென்னிலங்கை!

யாழில் உள்ள பிரபல பாடசாலையில் சற்று முன்னர் பதற்றம்!

யாழில் உள்ள பிரபல பாடசாலையில் சற்று முன்னர் பதற்றம்!

அனைத்துப் பெண்களுக்கும் அவசர எச்சரிக்கை: இலங்கையில் இப்படியும் நடக்கிறது!

அனைத்துப் பெண்களுக்கும் அவசர எச்சரிக்கை: இலங்கையில் இப்படியும் நடக்கிறது!