உந்துருளித் திருடர்களை மடக்கிப் பிடித்த பொலிஸ்!

  • Shan
  • June 14, 2018
38shares

திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றினை திருடிய இருவரை நேற்று மாலை கைது செய்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெருகல், ஈச்சிலம்பற்று பகுதியைச் சேர்ந்த 23, மற்றும் 22 வயதுடைய இருவரையே இவ்வாறு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடி மற்றொருவருக்கு விற்பனை செய்ய மறைத்து வைத்திருந்ததாகவும், இதுகுறித்து பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் குறித்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்கள் இருவரையும் தடுத்து வைத்துள்ளதோடு மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் முற்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க