ஊடகவியலாளரின் மனைவி மீது பாய்ச்சல்! பௌத்த பிக்குக்கு சிறைத்தண்டனை

  • Shan
  • June 14, 2018
202shares

பொதுபல சேனா அமைப்பின்தலைவர் கலகொட அத்தே ஞானசாரர தேரருக்கு ஒருவருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளசிரேஷ்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை தகாதவார்த்தைகளைப் பயன்படுத்தி திட்டித்தீர்த்ததுடன், மரண அச்சுறுத்தல்விடுத்த குற்றச்சாட்டிற்காகவே இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்காவின் முன்னாள்ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலமான 2010 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டசிரேஷ்ட ஊடகவியலாளரும், கேலிச் சித்திரக் கலைஞருமான பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியாஎக்னெலிகொடவிற்கு ஹோமாகம நீதிமன்ற வளாகத்தில் வைத்து அச்சுறுத்தல் விடுத்ததாக 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் திகதிபொதுபல சேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசாரர தேரர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பிலானவழக்கை விசாரணை செய்த ஹோமாகம நீதவான் உதேஷ் ரணசிங்க கடந்த மே மாதம் 24 ஆம் திகதிஞானசாரர தேரரை குற்றவாளியாக அறிவித்துடன், அதற்கானதண்டனை தீர்ப்பு யூன் 14 ஆம் திகதியான இன்று அறிவிப்பதாக அறிவித்திருந்தார்.

இதற்கமைய இன்றைய தினம்ஹேமாகம நீதவான் உதேஷ் ரணசிங்க, கலகொட அத்தே ஞர்னாசார தேரருக்கு ஓராண்டு கடூழியச் சிறைத்தண்டனையும், மூவாயிரம்ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

ஓராண்டு கடூழிய சிறைத்தண்டனையை ஆறு மாதத்திற்குள் கழிக்கலாம் என்றும் நீதவான் உத்தரவிட்டதுடன், சந்தியா எக்னெலிகொடவிற்குஅச்சுறுத்தல் விடுத்தமைக்காக ஐம்பது ஆயிரம் ரூபா நஷ்டஈடு வழங்குமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதேவேளை இன்றைய தினம்இந்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்ட போது நீதிமன்ற வளாகத்திற்குள்ளும், வெளியிலும்ஏராளமான பொலிசாரும், களகத் தடுப்புப் பொலிசாரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பும்பலப்படுத்தப்பட்டிருந்தது.

பொதுபல சேனா அமைப்பின்பௌத்த பிக்குகளும், ஆதரவாளர்களும் கூடியிருந்ததால் பதற்றம் ஏற்படலாம்என்பதாலேயே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன், நீர்பீரங்கி வாகனங்களும் குவிக்கப்பட்டு, இரும்பு வேலிகளும் கொண்டுவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க