கடை உரிமையாளருக்கு மின்னல் வேகத்தில் காத்திருந்த அதிர்ச்சி!

  • Shan
  • June 14, 2018
0shares

சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட காரைதீவுப்பிரதேசத்தில் தலைக்கவசத்துடன் வந்த நபர்கள் கடையின் உரிமையாளர் அணிந்திருந்த 5பவுண் தங்கச்சங்கிலியை அறுத்தெடுத்து மின்னல்வேகத்தில் உந்துருளியில் தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் தப்பிச்சென்ற மோட்டார்சைக்கிள் விளக்குகளை அணைத்தவாறு முன்பின் இலக்கத்தகடுகளை வெள்ளைத்தாளினால் மூடியவண்ணம் சென்றதாக கூறப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்று (13) இரவு 8.45மணியளவில் இடம்பெற்றுள்ளது.

காரைதீவு 1 விபுலாநந்த வீதியலுள்ள விசுவலிங்கம் கோடீஸ்வரன்(வயது53) என்பவரின் பலசரக்குக்கடையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்மாந்துறைப் பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரி இப்னுஅசார் தலைமையிலான பொலிஸ் குழுவினர் உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்து தடயங்களை அவதானித்து விசாரணைகளை மேற்கொண்டனர். நள்ளிரவு வரை விசாரணை தொடர்ந்தது.

அம்பாறையிலிருந்து விசேட துப்பறியும் சோக்கோ பொலிசாரும் வந்து தடயங்களைப்பார்வையிட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.

சந்தேகநபர் ஒருவரை உரிமையாளர் கோடீஸ்வரன் இனங்காட்டியுள்ளார். அவரைத்தேடிச் சென்றதும் அவர் தலைமறைவாகியுள்ளார்.

பொலிசார் அவரைக்கண்டு பிடிப்பதற்காக வலைவிரித்துள்ளனர். பிரஸ்தாப நபர் ஏலவே பல குற்றச்செயல்களில் ஈடுபட்டு சிறையிலிருந்துவந்தவர் எனக்கூறப்படுகின்றது.

சம்பவம் பற்றி கடைஉரிமையானர் வி.கோடீஸ்வரன் (53) கூறுகையில்,

”அன்று இரவு 8.45மணியிருக்கும். நானும் உனது உதவியாளரும் கடையில் நின்றிருந்தோம். மோட்டார்சைக்கிளில் இருவர் வந்தனர். இருவரும் தலைக்கவசம் அணிந்திருந்தனர். ஒருவர் வீதியில் இயங்குநிலையில் மோட்டார்சைக்கிளில் நின்றார். மற்றவர் தலைக்கவசத்துடனேயே என்னிடம் 3 பிறிஸ்டல் கேட்டார். நான் பணத்தைப்பெற்றுக்கொண்டு கொடுத்தேன்.அதை வைக்க வெற்றுப்பெட்டியொன்று கேட்டார்.

பெட்டியை எடுப்பதற்காக திரும்பியவேளை மின்னல்வேகத்தில் பாய்ந்து எனது கழுத்திலிருந்த மாலையை அறுத்துக்கொண்டு ஓடினார். நான் பின்னால் ஓடிப்போவதற்கிடையில் மோட்டார்சைக்கிளில் தயாராகவிருந்த நபர் இவரை ஏற்றிக்கொண்டு விர் என்று பறந்தார்.

எனது உதவியாளர் அவர்களை சிறிதுதூரம் துரத்திச்சென்றார். முடியவில்லை. அவர்கள் நேராக மாளிகைக்காட்டுப்பக்கம் ஓடித்தப்பினர். ஆனால் அவர்கள் லைற் போடவில்லை.பின் நம்பர் பிளேட்டை மறைத்து வெள்ளைத்தாள் ஒட்டியிருந்தார்கள். நான் மறுகணம் சம்மாந்துறை சென்று பொலிசாரிடம் முறையிட்டேன்.” என்றார்.

அப்பகுதிகளிலுள்ள சிசிரிவி கமராக்களில் சிக்காத வகையிலே அவர்கள் தப்பிச்சென்ற மோட்டார்சைக்கிள் விளக்குகளை அணைத்தவாறு முன்பின் இலக்கத்தகடுகளை வெள்ளைத்தாளினால் மூடியவண்ணம் சென்றிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

Image0

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
சவூதிப் பெண்களுக்கு அடித்த யோகம்!

சவூதிப் பெண்களுக்கு அடித்த யோகம்!

விமானங்களில் பயணம்செய்யும் உங்களுக்கு விமானங்கள் பற்றி என்னென்னவெல்லம் தெரியும்?

விமானங்களில் பயணம்செய்யும் உங்களுக்கு விமானங்கள் பற்றி என்னென்னவெல்லம் தெரியும்?

லண்டனில் நடந்த கத்திக்குத்தில் சிறுவன் மரணம்!

லண்டனில் நடந்த கத்திக்குத்தில் சிறுவன் மரணம்!