பறிக்கப்பட்ட உரிமையைக் கேட்பது இனவாதமாகாது!

  • Shan
  • June 14, 2018
34shares

தமிழ் மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமைகளை திருப்பித் தாருங்கள் எனக் கேட்பது இனவாதமாகாது என கூறியிருக்கும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன், அதனை இனவா தம் என கூறினால் அது சிங்கள அமைச்சர்களின் அறியாமை எனவும் கூறியுள்ளார்.

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஒரு இனவாதிபோல் செயற்படுகிறார் என அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியிருந்த கருத்து தொடர்பாக இன்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில், ”போருக்கு பின்னர் வடகிழக்கு தமிழ் மக்களிடம் உரிமை கேட்பதற்கு வலுவற்ற தன்மை இருந்தது. ஆனாலும் பின்னர் மக்கள் தங்களுக்கான உரிமைகளை கேட்பதற்கு ஆரம்பித்தார்கள்.

இவ்வாறு தமிழ் மக்கள் உரிமை கேட்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தெற்கிலிருந்து இவ்வாறான கருத்து வந்திருக்கின்றது. தமிழ் மக்கள் தங்களிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமைகளை மீளவும் தாருங்கள் என கேட்பது இனவாதம் ஆகாது.

இல்லை அது இனவாதமே என கூறினால். அது தெற்கில் உள்ள அமைச்சர்களின் விளக்க மற்ற தன்மையே ஆகும். மேலும் தமிழ் மக்கள் உரிமை கேட்பது சிங்க ள மக்களுக்கு எதிரான நிலைப்பாடு அல்ல. ஆனால் அந்த உரிமைக்குரல் சிங்கள மக்களுக்கு எதிரான நிலைப்பாடகவே காட்டப்படுகிறது” என்றார்.

இதையும் தவறாமல் படிங்க