சுவிஸில் இலங்கைப் பெண் பரிதாபச் சாவு!

  • Shan
  • June 14, 2018
74shares

சுவிற்சர்லாந்தின் பசல் யூனிஸ்பிட்டல் பகுதியில் உள்ள வாகாப் தடுப்பு முகாமில் தற்கொலை செய்ய முயற்சித்த பெண் இன்று உயிரிழந்துள்ளார்.

கடந்த செவ்வாய்க் கிழமை சிறையில் தற்கொலை செய்துக்கொள்ள முயற்சித்து ஆபத்தான நிலையில், குறித்த பெண் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கடுமையான காயம் காரணமாக பெண் இரண்டு நாட்களின் பின்னர் உயிரிழந்துள்ளதாக அரச சட்டத்தரணி அறிவித்துள்ளார்.

இலங்கையை சேர்ந்த 29 வயதான இந்த பெண், சுவிற்சர்லாந்தில் புகலிடம் கோரி விண்ணப்பத்திருந்த விண்ணப்பம் கடந்த ஆண்டு மே மாதம் நிராகரிக்கப்பட்டது.

டப்பிள்ன் நடைமுறைப்படி மோல்டா இந்த பெண் குறித்து பொறுப்புக் கூறவேண்டும். இதனையடுத்து தப்பிச் செல்ல முயற்சித்த நிலையில் சனிக்கிழமை பேர்ன் நகரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட பெண் கடந்த திங்கட் கிழமை பசல் பிராந்தியத்தில் உள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டார். இந்த நிலையிலெயே அவர் தற்கொலை செய்ய முயற்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதையும் தவறாமல் படிங்க