மன்னாரில் மக்களை மிரளவைத்த மர்மப் பொதி: அவிழ்த்துப் பார்த்த பொலிஸாருக்கு அதிர்ச்சி!

  • Shan
  • June 15, 2018
971shares

மன்னார் சௌத்பார் பிரதான வீதி புகையிரத நிலையத்திற்கு செல்லும் வீதியில் வீடு ஒன்றிற்கு முன் சந்தேகத்திற்கு இடமான பொதி ஒன்று இன்று வியாழன் காணப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் மத்தியில் சற்று நேரம் பதட்ட நிலை காணப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

இன்று வியாழன் (14) காலை மன்னார் சௌத்பார் புகையிரத நிலையத்திற்கு செல்லும் பிரதான வீதியில் வீடு ஒன்றிற்கு முன் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக கட்டப்பட்ட நிலையில் பொதி ஒன்று காணப்பட்ட போதிலும் குறித்த பிரதேசத்து மக்கள் எந்த கவனமும் செலுத்தவில்லை.

ஆனால் இன்று மதியம் குறித்த பொதியினுள் இருந்து துர்நாற்றம் வீசுவதை அவதானித்த மக்கள் அருகில் சென்று பார்த்த போது அப் பொதியில் இருந்து இரத்தம் சிந்துவதை அவதானித்து சந்தேகமடைந்தனர்.

அதனை தொடர்ந்து குறித்த பொதி தொடர்பாக பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்ததை தொடர்ந்து, குறித்த இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் அவ் பொதியினை அவிழ்த்து பார்த்த போது குறித்த பொதியினுள் இரத்தப் படிவுகளுடன் ஏதோவொரு உயிரினம் இருந்தது. அதனை புரட்டிப் புரட்டிப் பார்த்தபோது மோசமாக அடித்துக் கொல்லப்பட்ட நாய் ஒன்றின் சடலம் காணப்பட்டது.

இவ்வாறன மனிதாபிமானமற்ற ஒரு செயலை செய்து விட்டு இவ்வாறு மக்கள் நடமாடும் பகுதில் வீசி எறிந்தவர்கள் மனித தன்மை அற்றவர்கள் என மக்கள் விசனம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க