அக்கராயன் பிரதேசத்தை ஆண்ட தமிழ் மன்னனின் சிலை திறப்பு!

  • Shan
  • July 05, 2018
44shares

கிளிநொச்சியில் அக்கிராசன் எனும் குறுநில தமிழ் மன்னனின் சிலை இன்றைய தினம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள இன்றைய அக்கராயன் எனப்படும் இடத்தை 13ம் நூற்றாண்டில் குறுநில மன்னனாக ஆட்சி செய்த அக்கிராசனின் திருவுருவச் சிலையே இவ்வாறு திறந்துவைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து 5 இலட்சம் ரூபாவும் கரைச்சி பிரதேச சபையின் நிதியில் இருந்து 3 இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவும் இந்த சிலை திறப்பிற்காகச் செலவிடப்பட்டுள்ளன.

அக்கிராசனின் திருவுருவச் சிலை பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா மற்றும் சிவஞானம் சிறிதரன் ஆகியோரால் இன்றைய தினம் திறந்துவைக்கப்பட்டது.

அக்கிராசன் ஆண்ட மண்ணாக அக்கராயன் பிரதேசமும் அவர் கட்டுவித்த குளமாக அக்கராயன் குளமும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
“வாட்ஸ் ஆப்” பயனாளிகளின் தனிப்பட்ட பகிர்வு! எடுக்கப்பட்ட அதிரடி முடிவு

“வாட்ஸ் ஆப்” பயனாளிகளின் தனிப்பட்ட பகிர்வு! எடுக்கப்பட்ட அதிரடி முடிவு

அரசியல் கைதியான தேவதாசனின் உணவு தவிர்ப்பு போராட்டம்! அத்தியட்சகர் எடுத்துள்ள முடிவு

அரசியல் கைதியான தேவதாசனின் உணவு தவிர்ப்பு போராட்டம்! அத்தியட்சகர் எடுத்துள்ள முடிவு

ஐ.நா.சபையின் உறுப்பினர்கள் சென்ற வாகனம் மீது தாக்குதல்! ஒருவர்  உயிரிழப்பு

ஐ.நா.சபையின் உறுப்பினர்கள் சென்ற வாகனம் மீது தாக்குதல்! ஒருவர் உயிரிழப்பு