களத்தில் இறங்கத் தயாராகிறது சிறிலங்காவின் முப்படைகள்!!

370shares

முப்படையினரின் நேரடி பங்களிப்புடன் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்காக விசேட ஏற்பாடுகள் சட்டத்துக்கான வரைவை தயாரிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

நாட்டில் வெகுவாக விரிவடைந்து வரும் போதை பொருளை கட்டுப்படுத்துவதற்காக இலங்கை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகம் உள்ளிட்ட இலங்கை பொலிஸார் மூலம் பாரிய பணி நிறைவேற்றப்படுகிறது.

அத்தோடு தேவையான சந்தர்ப்பங்களில் அதற்காக பொலிஸ் விசேட அதிரடி படை மற்றும் இராணுவத்தின் ஒத்துழைப்பும் பெறப்படுகின்றது.

போதை பொருள் நடவடிக்கைகளை மிகவும் வெற்றிகரமாக முறியடிப்பதற்கு முப்படையின் நேரடியான பங்களிப்பை ஆக கூடுதலாக பெற்றுக்கொள்வதன் தேவை அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதற்கமைவாக போதைப்பொருள் நடவடிககையை கட்டுப்படுத்தும் பணியை மிகவும் வெற்றிகரமாக மேற்கொள்வதற்காக குறிப்பிட்ட காலப்பகுதிக்கு முப்படையினருக்கு சட்டமா அதிபரினால் சிபாரிசு செய்யப்பட்ட சில அதிகாரங்களை வழங்கும் வகையில் போதை பொருளை கட்டுப்படுத்துவது தொடர்பாக விசேட ஒழுங்குவிதிகள் தொடர்பான திருத்த சட்டம் தயாரிக்கப்பட உள்ளது.

இதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ மற்றும் சட்டம் மற்றும் சமாதானம் தொடர்பான அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோர் சமர்ப்பித்த ஒன்றிணைந்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் தப்பிச் சென்றது எவ்வாறு? வெளியாகும் திடுக்கிடும் உண்மைகள்!

விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் தப்பிச் சென்றது எவ்வாறு? வெளியாகும் திடுக்கிடும் உண்மைகள்!

ஒட்டுசுட்டானில் கர்ப்பிணி பெண்ணை தேடும் இராணுவம், வெளியாகும்  திடுக்கிடும் தகவல்கள்!

ஒட்டுசுட்டானில் கர்ப்பிணி பெண்ணை தேடும் இராணுவம், வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்!

உலக கோப்பையை கைப்பற்றிய பிரான்ஸ்; விடுதலை புலிகளின் கொடியை ஏந்தி கொண்டாடும் ஈழத்து மக்கள்!

உலக கோப்பையை கைப்பற்றிய பிரான்ஸ்; விடுதலை புலிகளின் கொடியை ஏந்தி கொண்டாடும் ஈழத்து மக்கள்!