தமிழ்ப்பெண்கள் குறித்து சீ.ஐ.ஏ பகீர் செய்தி!! பாலியல்தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக அறிக்கை!

  • Prem
  • July 11, 2018
507shares

இது ஒரு பரபரப்பு செய்தியல்ல. மாறாக சமூகம் சார்ந்த பொறுப்புடன் எழுதப்படும் ஒரு செய்தி.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான சீ.ஐ.ஏயின் முன்னாள் பணிப்பாளரும் தற்போதைய அமெரிக்க ராஜாங்க செயலாளருமான மைக்பொம்பையோ ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

அனைத்துலக ரீதியில் இடம்பெற்றுவரும் ஆட்கடத்தல்கள் தொடர்பான இந்த வருடத்தின் அறிக்கையிடல் அது.

அந்தஅறிக்கையில், அகதித்தஞ்சம்கோருவதற்காக இலங்கையில் இருந்து புறப்பட்ட பெண்களில் சிலர்கட்டாயபாலியல்தொழில் மற்றும் பலவந்த ஊழியத்தில் ஈடுபடுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆட்கடத்தல்தொழிலில்ஈடுபடும் முகவர் வலையமைப்புக்களினால் இந்த குருரமான செயல்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் இதேபோன்ற அவலநிலைமைகளை மியன்மாரிலிருந்து தப்பிச்செல்லும் ரொகிஞ்சாஅகதிகளும் எதிர்கொள்வதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைவிட சைப்பிரஸ் மாலைதீவு மலேசியா சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் இலங்கைப்பெண்கள் கட்டாயபாலியல்தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல ஜோர்தானில் பணிப்பெண்களாக பணிபுரியும் இலங்கைப்பெண்கள் தமது தொழில்தருனர்களிடமிருந்து தப்பிச்சென்றபின்னர் கட்டாயபாலியல்தொழில் ஈடுபடுத்தப்படுவதாகவும் அறிக்கை கூறுகிறது.

இலங்கைப் பெண்களைப்போலவே பிலிப்பைன்ஸ், ஈரான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான் சீனா ஆகிய நாடுகளின் பெண்களும் இவ்வாறு கட்டாயபாலியல்தொழில் மற்றும் பலவந்த ஊழியத்தில் ஈடுபடுத்தப்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க