இலங்கையில் 19 பேருக்கு தூக்குத்தண்டனை! மைத்திரி அங்கீகாரம்

  • Prem
  • July 11, 2018
383shares

போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்குமரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சிறைச்சாலைகளுக்குள் இருந்த வண்ணமே பாரியளவில் போதைப் பொருள் கடத்தலை மேற்கொள்கின்ற 19 பேர் இதுவரைஅடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா அரசாங்கத்தின்பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன, அவர்களுக்கு மரண தண்டனையைநிறைவேற்றுவதற்கான யோசனையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையில்சமர்பித்ததாகவும் குறிப்பிட்டார்.

தமிழர் தாயகப் பகுதிகள் உட்பட நாட்டின் அனைத்துப்பகுதிகளிலும் மீண்டும் தீவிரமடைந்துள்ள படுகொலைகள் உள்ளிட்ட குற்றச் செயல்களுக்குஅடிப்படைக் காரணமாக தெரிவிக்கப்படும் போதைப் பொருளை ஒழிப்பதற்கு கடமையானநடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா அரசின் அமைச்சரவைஇணைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இதற்கமையவே ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனதலைமையில் நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது, போதைப் பொருள்கடத்தலுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான யோசனை ஏகமனதாகஅங்கீகரிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த இணை அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன......

-‘மரண தண்டனையைஅமுல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தலுடன்தொடர்புபட்டு, சிறைக்குள்சென்று மீண்டும் இரண்டாவது தடவையாக அதில் தொடர்புபட்டவர்கள் மற்றும்சிறைச்சாலைக்குள் இருந்துகொண்டு போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்வை வைத்திருப்பவர்களின்பெயர்ப் பட்டியலை சமர்பிக்குமாறும், அவ்வாறு சமர்பிக்கப்படும் பட்சத்தில் உடனடியாக அவர்களுக்கு மரண தண்டனைநிறைவேற்றுவதற்கான கையெழுத்தை இடுவதற்கு தாம் தயாரென்று ஜனாதிபதி நேற்று கூறினார்.இதற்கு முன்னர் எல்லா தீர்மானங்களும் கையெழுத்து இடாமலேயே மேற்கொள்ளப்பட்டன.

எனினும் தற்போது அப்படியல்ல. அமைச்சரவையின் தீர்மானத்திற்கு அமைய பட்டியலைநீதியமைச்சின் ஊடாக தனக்கு வழங்கும்படி ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

19 பேர் இதுவரைஇனங்காணப்பட்டுள்ள நிலையில் இவர்களில் இரண்டு முறை போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்பைவைத்திருந்தவர்களுக்கு முதற்கட்டமாக மரண தண்டனை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்பாடு வெற்றியளிக்கப்படும் பட்சத்தில் அடுத்தகட்டமாக பாலியல் மற்றும்பாரியளவான குற்றச் செயல்களில் ஈடுபடுகிறவர்களுக்கு எதிராகவும் மரண தண்டனையைநடைமுறைப்படுத்த எதிர்பார்க்கின்றோம்" என்றார் ராஜித்த.

இதேவேளை தமிழர் தாயகம் உட்பட நாட்டின் அனைத்துப்பகுதிகளிலும் அதிகரித்துள்ள போதைப்பொருள் கடத்தல், பாவணை மற்றும்விற்பனை ஆகியவற்றை ஒழிக்கும் அதிகாரம் இராணுவம் உள்ளிட்ட அரச படையினருக்கும்வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித்த மேலும் தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க