வடக்கில் விடுதலைப்புலிகள் ஆதரவை தகர்க்கும் அரசாங்கத்தின் புதிய வியூகம்!

58shares
Image

சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, பிரதி அமைச்சர் நளின் பண்டார ஜயமக மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய வளாகத்துக்கு இன்று முற்பகல் 10.30 மணிக்கு வருகை தந்த சட்டம் ஒழுங்கு அமைச்சருக்கு யாழ்ப்பாண பொலிஸாரால் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தின் மாநாட்டு மண்டபத்தில் யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கான சிறப்பு கூட்டம் அமைச்சர் தலைமையில் ஆரம்பமானது.

இரண்டு நாள் பயணமாக யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார யாழ். மாவட்டத்தின் சிவில் சமூகப் பிரதிநிதிகள், வடக்கு மாகாண ஆளுநர், முதலமைச்சர், யாழ்ப்பாண ஆயர் உள்ளிட்டோரையும் சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.

வடக்கு மக்களிடம் மீண்டும் தலைதூக்கும் விடுதலைப் புலிகள் ஆதரவு மனோநிலையை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய்வதற்காகவே சட்டம், ஒழுங்கு அமைச்சரும் பொலிஸ்மா அதிபரும் யாழ்ப்பாணத்துக்கு பயணமாகின்றனர் என பிரதியமைச்சர் நளின் பண்டார ஜயமக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க