பலத்த காற்று வீசப்போகிறதாம்!

70shares

இலங்கையிலும், இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்பிலும் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமாகக் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் தொடரக்கூடும் என்று இந்த அறிவித்தலை ஸ்ரீ லங்காவின் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.

இதுதொடர்பில் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மேற்கு, சப்ரகமுவ, மத்திய வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். ஏனைய பிரதேசங்களில் சிறியளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய , சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 50 மி.மீ அளவான மழை பதிவாகக்கூடும்.

நாடு முழுவதும், அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை பெய்யக் கூடும்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30 – 40 கிலோ மீற்றர் வரை காணப்படும். நீர்கொழும்பிலிருந்து புத்தளம், காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான மற்றும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-65 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் அக் கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.

ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும். கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயத்தில் அவதானமாக இருக்குமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் தப்பிச் சென்றது எவ்வாறு? வெளியாகும் திடுக்கிடும் உண்மைகள்!

விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் தப்பிச் சென்றது எவ்வாறு? வெளியாகும் திடுக்கிடும் உண்மைகள்!

ஒட்டுசுட்டானில் கர்ப்பிணி பெண்ணை தேடும் இராணுவம், வெளியாகும்  திடுக்கிடும் தகவல்கள்!

ஒட்டுசுட்டானில் கர்ப்பிணி பெண்ணை தேடும் இராணுவம், வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்!

உலக கோப்பையை கைப்பற்றிய பிரான்ஸ்; விடுதலை புலிகளின் கொடியை ஏந்தி கொண்டாடும் ஈழத்து மக்கள்!

உலக கோப்பையை கைப்பற்றிய பிரான்ஸ்; விடுதலை புலிகளின் கொடியை ஏந்தி கொண்டாடும் ஈழத்து மக்கள்!