கரைச்சி கோட்ட அதிகாரி மற்றும் பொலிஸாரை அதிர வைத்த பாடசாலை மாணவர்கள்!

9shares

கிளிநொச்சி கனகாம்பிக்கைக்குளம் பாடசாலைக்கு அருகில் மதுபோதையில் இருந்த இளைஞர்கள் குழு மாலை நேரவகுப்பு முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவியை தாக்கியமை தொடர்பில் இன்று கனகாம்பிகைக்குளம் பாடசாலை மாணவர்களால் கற்றல் புறக்கணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கனகாம்பிக்கைக்குளம் பகுதியைச்சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் மாலை நேரக்கல்வியை முடித்து விட்டு வீடு திரும்பிக்கொணடிருந்த சமயம் நேற்று (11-07-2018) பிற்பகல் 5.45மணியளவில் கனகாம்பிகைக்குளம் பாடசாலைக்கு அருகில் மது போதையில் நின்ற இளைஞர்கள் குழுவினரால் மாணவி மீது தகாத வார்த்தைப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், மாணவியையும் தாக்கியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மாணவி தனது பெற்றோருக்கு நடந்த விடயத்தைச்சொன்னபோது மாணவியின் தந்தையார் சம்பவஇடததிற்குச்சென்று குறித்த இளைஞர்களிடம்கேட்டுவிட்டு வீட்டிற்குச்சென்றநிலையில் அவரைப் பின் தொடர்ந்து சென்ற இளைஞர் குழுவினர் வீட்டினுள் புதுகுந்து பொருட்களை சேதமாக்கியதுடன் வீட்டில் இருந்தவர்களையும் தாக்கியுள்ளனர்.

இதுதொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, இச்சம்பவத்துடன் தொடர்புபட்ட இரண்டு பேரைக்கைது செய்த பொலிசார் அவர்களை உடனேயே விடுவித்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த பிரதேசத்தில் அமைதியின்மை ஏற்பட்டதுடன், இன்று (12-07-2018) கனகாம்பிகைக்குளம் பாடசாலை மாணவர்கள் கற்றல் புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இது பற்றித் தெரியவருவதாவது.

இன்று காலை கற்றல் செயற்பாடுகளிற்காக பாடசாலைக்கு வருகைதந்த மாணவர்கள், தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு தெரிவித்து இன்று பாடசாலைக்கு செல்லாது ஒன்று கூடி கற்றல் செயற்பாடுகளில் இருந்து விலகியிருந்தன்ர. பாடசாலை மைதானத்தில் மாணவர்களும் பெற்றோரும் ஒன்று கூடியிருந்தனர்.

நேற்றயதினம் குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் மாணவிகள் தனியார் கல்வி நிலையத்திற்கு சென்று திரும்புகையில் பாடசாலை மைதானத்தில் இருந்த சிலர் கல் வீசி தாக்கியதாக பெற்றோரிடம் முறையிட்டுள்ளனர். காயமடைந்த சிறுமியின் தந்தை குறித்த பகுதயில் நின்ற இளைஞர்களிடம் சம்பவம் தொடர்பில் எச்சரித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசாரிடம் நேற்றய தினம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது,இந்நிலையில், குறித்த பகுதியில் 18 வயதுக்கு குறைந்த சிலர் இவ்வாறு வீதியில் மாலை நேரங்களில் நிற்பதாகவும், அவர்களில் சிலர் போதைப்பொருள் பாவித்தவர்கள் அதன் காரணமாகவே இவ்வாறு செயற்படுவதாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர். பாடசாலை சூழலில் தம்மை பழைய மாணவர்கள் என தெரிவித்துக்கொண்டு போதைப்பொருள் பாவணையில் ஈடுபடுவதுடன், அவ்வீதியால் செல்லும் பிள்ளைகள் மீது இவ்வாறு தகாதமுறையில் நடந்து கொள்ள முற்படுவதாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை அவர்களின் செயற்பாடு வயது வேறுபாடின்றி காணப்படுவதாகவும் பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர். 11 வயது சிறுமிக்கு நடந்தது போன்று எமது பிள்ளைகளிற்கும் நடக்காத வகையில் பிள்ளைகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தப்படுத்தி தருமாறு தெரிவித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது, சம்பவ இடத்திற்கு கரைச்சி கோட்ட அதிகாரி, மற்றும் பொலிசார் வருகை தந்து பாடசாலை அலுவலகத்தில் பேச்சு நடத்தினர். தொடர்ந்து இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறாதவாறு நடவடிக்கை எடுப்பதாக பொலிசாரால் உறுதி வழங்கப்பட்டதை அடுத்து கற்றல் செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

இதையும் தவறாமல் படிங்க
தமிழர் தாயகத்தில் தியாக தீபத்தின் நினைவேந்தல்; நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு!

தமிழர் தாயகத்தில் தியாக தீபத்தின் நினைவேந்தல்; நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு!

யாழ்ப்பாண மக்களுக்கு ஓர் முக்கிய செய்தி! பனை மரம்போல பல்கிப் பெருகவுள்ள மா மரங்கள்!!

யாழ்ப்பாண மக்களுக்கு ஓர் முக்கிய செய்தி! பனை மரம்போல பல்கிப் பெருகவுள்ள மா மரங்கள்!!

சிகிரியாவில் இளைஞர் யுவதிகள் செய்த அநாகரிக செயல்! பலர் முகம் சுழிப்பு!!

சிகிரியாவில் இளைஞர் யுவதிகள் செய்த அநாகரிக செயல்! பலர் முகம் சுழிப்பு!!