உணவுப்பொருட்களில் வௌவால் எச்சம்! மக்களே உசார்!

16shares
Image

கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச சபைக்கு முன்பாகவுள்ள வெதுப்பக உணவுப்பொருட்களை பாதுகாப்பற்ற முறையில் வைத்திருந்த அதன் உரிமையாளருக்கு பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச சபைக்கு முன்பாகவுள்ள வெதுப்பகப்பொருட்களை விற்பனை செய்யும் விற்பனை நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த பொருட்களில் வெளவால் எச்சங்கள் காணப்பட்டமை தொடர்பில் திடீர் பரிசோதனை மேற்கொண்ட பொதுச்சுகாதார பரிசோதகர்கள் குறித்த உரிமையாளருக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுக்களை பதிவு செய்து நேற்று( 11-07-2018) கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் பதில் நீதவான் ம.கிறேசியன் முன்னிலையில் ஆயர்படுத்தப்பட்டபோது, பத்தாயிரம் தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க