2050 ஆம் ஆண்டளவில் மிக முக்கியமான இடத்தைப் பெறவிருக்கும் ஸ்ரீலங்காவின் கிழக்கு வாசல்.

46shares

ஸ்ரீலங்காவின் கிழக்கு வாசலாக அபிவிருத்தி செய்யப்படும் திருகோணமலைத் துறைமுகம் 2050 ஆம் ஆண்டளவில் மிக முக்கியமான இடத்தைப் பெறும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டினை அபிவிருத்தி செய்வதே 2015 ஆம் ஆண்டு ஆட்சிபீடமேறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தின் பிரதான நோக்கமாக இருந்ததாக அவர்சுட்டிக்காட்டியுள்ளார்.

கிழக்கு மாகாணத்திலுள்ள திருகோணமலை துறைமுகம் மற்றும் அதனைச் சூழவுள்ள நகரங்களை அபிவிருத்தி செய்யும் நீண்டகாலத் திட்டம் நேற்று புதன்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.2050 ஆம் ஆண்டளவில் ஸ்ரீலங்காவிற்கான கிழக்கு வாசல் என்ற தொனிப்பொருளில் இந்த திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் உறையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க,எதிர்வரும் 20 ஆண்டுகளில் வங்களா விரிகுடாவில் பாரிய அபிவிருத்தி திட்டமொன்று இடம்பெறும் எனக் கூறியுள்ளார்.

“இன்று திருகோணமலையின் பாரிய அபிவிருத்தித் திட்டத்தினை ஆரம்பிப்பதன் மூலம் இலங்கை இந்து சமுத்திரத்தின் கேந்திர நிலையமாக அமுல்படுத்தும் திட்டமும்முழுமையடைகின்றது. இதற்கு முன் ஸ்ரீலங்கா இந்து சமுத்திரத்தின் கேந்திர நிலையமாக அறிவிக்கப்பட்ட போது கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் பல துறைமுகங்கள்அபிவிருத்திப் படுத்தப்பட்டன. இன்றும் இந்து சமுத்திரத்தின் பொருளாதார அபிவிருத்தியினூடாக நடைமுறையில் எமது பார்வை கொழும்பு மற்றும் கிழக்கு துறைமுகத்தின் மீதும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் மீதும் விழுந்துள்ளது.

ஒருவழியில் இந்தியா, பாகிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளின் அண்மை காரணத்தால் கொழும்பு துறைமுகத்திற்கும் முக்கியத்துவ மொன்றுள்ளது. அதேபோல சுயெஸ் கால்வாயினூடாக சிங்கப்புரினை நோக்கி பயணிக்கும் கப்பல்கள் ஹம்பாந்தோட்டையினை தாண்டிச் செல்கின்றன. அதன் மூலமும்அதிர்ஷ்டமொன்றினைப் பெறவுள்ளோம். எனினும் எதிர்வரும் 20 ஆண்டுகளில் வங்காள விரிகுடாவில் பாரிய அபிவிருத்தியொன்று இடம்பெறும்.

2050ஆம் ஆண்டு ஆகும் பொழுது அங்கு 3பில்லியன் மக்கள் தொகையினர் காணப்படுவர். அத்தோடு அபிவிருத்தியும் ஏற்படும். கிழக்கின் வாசலாக திருகோணமலையினையே பரிந்துரைக்க வேண்டும். 2015ஆம் ஆண்டு ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம் ஆட்சி பீடமேறியதும் பிரதான நோக்கமாக இருந்தது நாட்டினை அபிவிருத்தி செய்வது மாத்திரமேயாகும்.

நாட்டின் அபிவிருத்தி மேல்மாகாணத்திலேயே தங்கியுள்ளது. அதன் காரணத்தால் நாம் முதலாவதாக ஆரம்பித்தது மேல்மாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்களையாகும். அத்தோடு ஹம்பாந்தோட்டைவரையிலான கரையோரபகுதியினையும், கண்டி அதிவேக நெடுஞ்சாலையினையும் அமைக்கவுள்தோடு நாட்டின் ஏனைய பகுதிகளின் அபிவிருத்தி தொடர்பிலும் நாம் மறக்கவில்லை.” என்றும் தெரிவித்தார்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க