தூக்கு தண்டணைக்கு 'அலுகோசுகள்' தேவை! ...நல்லாட்சி அழைக்கிறது

  • Prem
  • July 12, 2018
199shares

இலங்கையில் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நடைமுறைப்படுத்த சிறிலங்காவின் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதன்பின்னர் போதைப்பொருள் தொடர்பான கடும் குற்றங்களுக்காக நீதிமன்றத்தால் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களின் பெயர்ப்பட்டியலை இன்று சிறிலங்கா அரசதலைவர் மைத்திரிபால சிறிசேனாவிடம் நீதியமைச்சு கையளித்துள்ளதாகவும் தெரிகிறது

இதனால் அலுகோசுகள் என விளிக்கப்படும் மரணதண்டனை நிறைவேற்றும் ஊழியர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

மரணதண்டனையை நிறைவேற்றுபவர்களுக்கான இரண்டு பதவி வெற்றிடங்கள் காணப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

எனினும் தூக்கிலிடுவதற்கு பயன்படுத்தப்படும் கயிறு மற்றும் உபகரணங்கள் ஏற்கனவே சிறைச்சாலைகள் திணைக்களத்தில் உள்ளதாகவும் அவர் கூறுகிறார். இலங்கையில் ஒரு பெண் உட்பட போதைப்பொருள் சம்பந்தப்பட்ட 13 மரணதண்டனை கைதிகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க