இரவில் தனிமையில் சென்ற இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

316shares

இளம்பெண்ணொருவர் மாட்டில் மோதி படுகாயமடைந்த சம்பவம் ஒன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகிறது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.,

பூவரசன்குளத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் வவுனியா சென்ற இளம்பெண்ணொருவர் நேற்று மாலை 9.40 மணியளவில் நெளுக்குளம் பகுதியில் வீதியில் படுத்திருந்த மாட்டுடன் மோதி காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்தால் இருசக்கர வாகனமும் படு தேசத்துக்குள்ளாகியுள்ளதாக மேலும் அறிய முடிகிறது.

குறித்த பகுதியில் கட்டாக்காலி மாடுகளின் தொல்லை அதிகரித்துள்ளதாகவும் இதனால் இப்பகுதியில் அடிக்கடி இவ்வாறான விபத்துக்கள் இடம்பெறுவதாகவும் இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க