இளம்பெண்ணின் தகாத செயலால் பற்றி எரிந்த வீடு!

307shares

மன்னாரில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவம்தான் இந்த செய்தி, இது பரபரப்புக்காக வெளியிடப்பட்டதல்ல.

இன்றைய தலைமுறைகளின் செயற்பாடுகள் எந்தளவுக்கு செல்கின்றன என்ற ஒரு விழிப்புணர்வுக்காகவே இந்த செய்தியை பிரசுரிக்கின்றோம்.

குறித்த பெண்ணின், குடும்பத்தின் வேண்டுகோளுக்கிணங்க பெயர், இடம் குறிப்பிடாமல் குறித்த செய்தியை சமூக அக்கறையுடன் பிரசுரிக்கின்றோம்.

மன்னாரில் உள்ள கிராமம் ஒன்றில் வசிக்கும் ஏழைக்குடும்பத்தில் மூன்று சகோதரங்களுடன் பிறந்த மூத்த மகள் ஒருவர் வீட்டில் தந்தை, தாய் வெளியில் சென்ற நேரத்தில் சில நாட்களாக பழகிய வேறு மாவட்ட ஆண் நண்பர் ஒருவர் வீட்டுக்குள் அழைத்து தனது சகோதரங்களை வீட்டுக்கு வெளியில் அனுப்பி விட்டு தகாத உறவில் ஈடுபட்டுகொண்டிருந்திருக்கிறார்.

அந்த சமயத்தில் மது போதையில் வந்த தந்தை இதனை நேரடியாக கண்டு அதிர்ச்சி அடைந்ததுடன் குறித்த இளைஞனை தாக்கிவிட்டு மகளை தாக்க முற்பட்டபோது குறித்த பெண் கையில் சிக்காமல் ஓடியுள்ளார்.

இதனால் கடுமாத்திரமடைந்த தந்தை கோபத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் வீட்டை தீயிட்டு கொளுத்தியுள்ளார்.

இதனால் வீடு உட்பட வீட்டில் உள்ள உடமைகள் அனைத்தும் எரிந்து நாசமாகியுள்ளது. ஏற்கனவே வறுமையிலிருந்த குறித்த குடும்பம் தற்போது நிர்கதியான நிலையில் உள்ளது.

இச் செய்தியை படிக்கும் எமது தளத்தின் பெறுமதிமிக்க ஒவ்வொரு வாசகர்களும் இதை ஒரு செய்தியாக பார்க்காமல் உங்கள் பிள்ளைகளின், உறவுகளின் ஒவ்வொரு செயற்பாடுகளையும் அவதானியுங்கள், பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடன் நேரத்தை செலவழியுங்கள், அவர்களுடன் நட்பாக இருங்கள் இனி இப்படியான ஒரு சம்பவம் தமிழர் பகுதிகளில் இடம்பெற கூடாது, எமது இளைஞர்கள் பல துறைகளில் முன்னேறி தமிழர்களை தலை நிமிர செய்ய வேண்டும் என்பதே எமது நோக்கமுமாகும்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க