அரச அலுவலர்களுக்கு முதலமைச்சர் விக்னேஷ்வரன் விடுத்துள்ள அதிரடி உத்தரவு!

551shares

வடக்கில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா இராணுவத்தினருக்கு சிவில் நிர்வாகத்துடன் தொடர்புடைய தரவுகளை வழங்கத் தேவையில்லை என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அரச அலுவலர்களை அறிவுறுத்தியுள்ளார்.

அதேவேளை சிறிலங்கா இராணுவத்தினர் சிவில் நிர்வாகத்துடன் தொடர்புடைய தரவுகள் உட்பட தகவல்களை கோரினால், அது குறித்து தனக்கு அறிவிக்குமாறும் வட மாகாண முதலமைச்சர் அரச அலுவலகர்களிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.

கிளிநொச்சி மாவட்ட மாற்றுவலுவுள்ளோர் சங்கத்தின் புதிய கட்டடம் யூலை 12 ஆம் திகதியான இன்று வியாழக்கிழமை வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டது.

இந்த கட்டடத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட வட மாகாணச சபை உறுப்பினர் சுப்ரமணியம் பசுபதிப்பிள்ளை, கிளிநொச்சியில் இராணுவத்தின் ஆட்சியே நடைபெறுவதாக பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.

கிளிநொச்சி வைத்தியசாலைகளில் சில தரவுகளை இராணுவத்தினர் சேகரிப்பதாக வட மாகாண சபை உறுப்பினர் சுப்ரமணியம் பசுபதிப்பிள்ளை தனது உரையில் முன்வைத்த குற்றச்சாட்டு குறித்து கருத்துத் தெரிவித்த வட மாகாண முதலமைச்சர் தமது அனுமதியில்லாமல் எந்தவொரு தரவுகளையும் இராணுவத்தினருக்கு வழங்கக் கூடாது என அரச அதிகாரிகளுக்கு கண்டிப்பான உத்தரவொன்றை பிறப்பித்தார்.

இதேவேளை இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய வட மாகாண புனர்வாழ்வு மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் அனந்தி சசிதரன், போரில் இருந்து மீள்வதற்கு நடவடிக்கைகளை புனர்வாழ்வு அமைச்சு ஏற்படுத்த தவறியுள்ளதாகவும் தமிழ் மக்களை கையேந்துபவர்களாக வைத்திருப்பதே மத்திய அரசாங்கத்தின் விருப்பமாக உள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

தம்மை அரசியல் அரசாங்கில் இருந்து அகற்றுவதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கமும் சில அரசியல் தலைமைகளும் முயற்சிக்கலாம் எனவும் அனந்தி சசிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க