கதிர்காமத்தில் ஏற்படவுள்ள மாற்றம்!

  • Shan
  • August 06, 2018
44shares

கதிர்காமம் புனித பிரதேசத்திலுள்ள கடைகளும், வர்த்தக தொகுதிகளிலும் ஒரே இடத்திற்கு மாற்றப்பட இருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகவும் இதற்காக 500 மில்லியன் ரூபா செலவிடப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் ஊவா மாகாணம் மொனராகலை மாவட்டத்திலுள்ள கதிர்காமம் புனித தலம், தமிழரின் முருக வழிபாட்டுக்கு உகந்த திருத்தலமாகும்.

கதிர்காமம் எச்சக்குன்றில் அமைந்துள்ள இந்த திருக்கோவில் நாட்டு மக்களை மட்டுமன்றி வெளி நாட்டில் உள்ளோரையும் ஈர்க்கின்ற திருத்தலமாக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதையும் தவறாமல் படிங்க