ஈழத்தை நோக்கி புறப்பட்ட ஈழத்தமிழர் நடுவானில் மரணம்!

178shares

பாரிய கனவுடன் தாயக்கை நோக்கி பயணித்த நபரின் உயிரி நடுவானில் பிரிந்துள்ளமை அவரது மனைவி மற்றும் பிள்ளைகளை பாரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

டென்மார்க்கில் இருந்து இலங்கை நோக்கி புறப்பட்ட நபர் விமானம் நடுவானில் பயணித்துக் கொண்டிருக்கும் நேரம் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

கடந்த முதலாம் திகதி எமிரேட்ஸ்க்கு சொந்தமான விமானத்தில் தனது தாயகத்தை நோக்கி புறப்பட்ட பரமலிங்கம் பாலச்சந்திரன் என்ற 58 வயதுடைய தமிழரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும் விமானம் புறப்பட்டு ஒன்றரை மணித்தியாலத்தின் பின்னரே குறித்த நபருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என தெரியவருகின்றது.

தொடர்ந்தும் விமானத்தில் பணியாளர்களால் குறித்த நபருக்கு முதலுதவி வழங்கப்பட்டுள்ள போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

டுபாய் நோக்கி பயணித்த எமிரேட்ஸ் விமானத்தின் அதிகாரிகள் குறித்த நபர் உயிரிழந்த விடயத்தை அறிந்து கிறிஸின் தலைநகரான எதேன்ஸில் அவரது உடலை ஒப்படைத்து விட்டு சென்றுள்ளனர்.

இருப்பினும் இறந்த நபரின் உடல் அவரது சொந்த இடமான டென்மார்க்கிற்கு கொண்டு வரப்படவில்லை. அவரின் உடலை சொந்த இடத்திற்கு கொண்டு வருவதற்காக அந்த நாட்டு அதிகாரிகள் சட்டநடைமுறைகளை எடுத்துள்ளனர்.

உயிரிழந்த நபர் 3 பிள்ளைகளின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க