இலங்கையில் இரு புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து!

42shares
Image

இலங்கையில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

கொழும்பு - கண்டி பிரதான புகையிரத பாதையில் பொல்கஹவெல புகையிரத நிலையம் அருகே குறித்த இரண்டு புகையிரதங்களும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்தில் 32 பேர் படுகாயமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் பொல்கஹவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்தினால் புகையிரத சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையும் தவறாமல் படிங்க