புலம்பெயர் நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களை இலங்கை சிறையில் அடைக்க சதி?

383shares

புலம்பெயர் நாடுகளில் வாழும் இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு வருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த கோரிக்கைக்கு பின்னணியில் புலம்பெயர் தேசத்தில் வாழும் தமிழர்களையும் வரவழைத்து விசாரணை என்ற போர்வையில் சிறையில் அடைக்க ஸ்ரீலங்கா அரசு முயல்கிறதா என்ற சந்தேகங்கள் தமிழர்கள் மத்தியில் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இது தொடர்பில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது.,

இலங்கையில் பல்வேறு துறைகளில் பணியாற்றுவதற்கு பொறியியலாளர்கள் உட்பட பலர் தேவையாக உள்ளனர். எனினும் இலங்கையில் படித்த சமூகத்தினர் அனைவரும் தற்போது வெளிநாட்டிலேயே உள்ளனர்.

இலங்கையிலேயே தங்கியிருக்க வேண்டும் என கூறவில்லை. குறைந்தது இரண்டு மூன்று வருடங்களுக்கு நாட்டில் தங்கியிருந்து விட்டு செல்லுங்கள் என ஜனாதிபதி மேலும் கோரியுள்ளார்.

இந்நிலையில்தான் பாதுகாப்பு கருதி புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்களையும் இலங்கைக்கு வரவழைத்து சிறையில் அடைக்க ஸ்ரீலங்கா அரசு முயல்கிறதா என்ற கேள்விகளும் தமிழர்கள் மத்தியில் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இன்று (06.08.2018) மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டபோதே ஜனாதிபதி குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க