ஒரே நாளில் தமிழ் சிங்கள மக்களை துயரத்தில் ஆழ்த்திய சம்பவங்கள்!

175shares

இன்று மாலை ஒரு பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது.

கொழும்பு - கண்டி பிரதான புகையிரத பாதையில் பொல்கஹவெல புகையிரத நிலையம் அருகே இரண்டு புகையிரதங்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்தில் 32 பேர் படுகாயமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் பொல்கஹவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்தினால் புகையிரத சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கொழும்பு கோட்டையில் இருந்து இரவு 8 மணிக்கு பதுள்ளை நோக்கி பயணிக்கவிருந்த தபால் புகையிரதத்தின் பயணம் இன்று இரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

குறித்த விபத்துக்கள் தமிழ், சிங்கள மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க