குளத்தில் தத்தளித்த நான்கு இளைஞர்கள்; காப்பாற்ற முடியாமல் போன உயிர்!

56shares

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உறுகாமம் பகுதியில் குளத்தில் நீராடச்சென்ற இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

இன்றைய தினம் உறுகாம குளத்திற்கு தோணியில் நான்கு இளைஞர்கள் நீராடச் சென்றுள்ளனர். இதன் போது தோனி கவிழ்ந்ததில் ஒருவர் காணாமல் போயுள்ளதுடன் மற்றைய மூவரும் மீனவர் ஒருவரினால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இன்று பி.ப சுமார் 2 மணியளவில் குளத்தில் நீராடுவதற்காக 4 இளைஞர்களும் செங்கலடி வந்தாறுமூலையில் இருந்து உறுகாமக் குளத்திற்கு சென்றுள்ளனர்.

இதன் போது ஒருதோனியில் நான்கு இளைஞர்களும் பயணித்தநிலையில் குளத்தின் நடுவே தோனி கவிழ்ந்து குறித்த விபத்துச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

இதன்போது நீச்சல் தெரியாமல் குளத்தில் தத்தளித்த இளைஞர்கள் காப்பாற்றுமாறு சத்தமிட்டுள்ளனர்.

இதனையடுத்து அவ் வழியே சென்ற மீனவர் தேனியில் சென்று மூன்று பேரை காப்பாற்றியுள்ளார்.

காப்பாற்றப்பட்ட மூவரும் கரடியனாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதில் ஒருவர் மட்டக்களப்பிற்கு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

காணாமல் போன நான்காவது இளைஞரை தேடும் பணியில் மீனவர்கள் மற்றும் பொது மக்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த சம்பவத்தில்

வந்தாறுமூலையைச் சேர்ந்த தங்கராசா யேசுதாசன் வயது 16 என்றே இளைஞரே காணாமல் போயுள்ளார்.

விஜயநாதன் விஜயகாந் (25 வயது) வந்தாறுமூலை

தியாகராசா பிரதாப் 17 வயது வந்தாறுமூலை, கனகசபை ஜகதீஸ்வரன் 15 வயது. ஆகிய மூன்று இளைஞர்களும் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்


இதையும் தவறாமல் படிங்க