நின்றுகொண்டிருந்த தொடருந்துக்கு பின்னால் வந்த பேரதிர்ச்சி!

  • Shan
  • August 07, 2018
103shares

சப்ரகமுவ மாகாணம் ரம்புக்கனை, பொல்கஹவெல தொடருந்து நிலையங்களுக்கு அருகில் நேற்று மாலை இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 17 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்கள் பொல்கஹவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் மேலதிக சிகிச்சைகளுக்காக 10 பேர் குருநாகல் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து கண்டி நோக்கி பயணித்த அலுவலக தொடருந்து தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில், கொழும்பிலிருந்து ரம்புக்கணை நோக்கி பயணித்த தொடருந்து அதனுடன் மோதியிருக்கிறது.

இதனால் இரண்டு தொடருந்துக்களும் சேதமடைந்ததாக ஸ்ரீ லங்காவின் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது. இந்த விபத்தைத் தொடர்ந்து பிரதான தொடருந்துப் பாதையில் தொடருந்துச் சேவைகள் முற்றுமுழுதாக முடங்கியுள்ளன.

இதன் காரணமாக கொழும்பு கோட்டையில் இருந்து இரவு 8.00 மணிக்கு பதுளை நோக்கி புறப்படவிருந்த இரவுநேர தபால் தொடருந்துச் சேவை ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

வன்னி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்

வன்னி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்

சிறிலங்காவின் ஆட்சியை கைப்பற்றும் மஹிந்தவின் புதிய வியூகம்

சிறிலங்காவின் ஆட்சியை கைப்பற்றும் மஹிந்தவின் புதிய வியூகம்