உயர்தரப் பரீட்சைக்கு முழுப்பொலிஸ் பாதுகாப்பு!

  • Shan
  • August 07, 2018
13shares

இலங்கையில் க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறும் பரீட்சை நிலையங்களுக்காக விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதென பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இதன்படி பரீட்சை ஒருங்கிணைப்பு நிலையங்களுக்கும், பிரதேச வினாத்தாள் சேகரிப்பு நிலையங்களுக்கும் தலா மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.

ஒவ்வொரு பரீட்சை நிலையத்தைச் சார்ந்ததாக பொலிஸ் ரோந்து சேவைகளும் இடம்பெறுகின்றன. அவ்வாறே வினாத்தாள்களையும், விடைத்தாள்களையும் ஏற்றிச் செல்லும் வாகனங்களுடனும் தலா இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று பொலிஸ் தலைமையகம் மேலும் கூறியுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க