கடற்தொழிலாளர்களின் தற்போதைய நம்பிக்கை அடைக்கலநாதன்!

6shares
Image

முல்லைத்தீவு மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட கடற்தொழில் நடவடிக்கையினை கட்டுப்படுத் கோரி மீனவர்கள் மேற்கொண்ட போராட்டம் நேற்று ஜந்தாவது நாளாக தொடர்ந்தவண்ணமுள்ள நிலையில்

நேற்று இரவு போராட்டம் மேற்கொண்டு வரும் மக்களை வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது மீனவ அமைப்புக்களின் தலைவர்கள் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் ஆகியோர் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை தொடர்பில் தெரிவித்துள்ளார்கள். தாங்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்திற்கு திருகோணமலை,மன்னார்,யாழ்ப்பாணம் மாவட்டத்தினை சேர்ந்த கடற்தொழில் அமைப்புக்களும் மற்றும் பொது அமைப்புக்களும் ஆதரவு தெரிவித்து தங்களுடன் தொலைபேசியில் உரையாடி வருகின்றார்கள் என்பதை நாடாளமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுக்குத் தெரியப்படுத்தியுள்ளார்கள்.

இதன்போது மீனவர்களின் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவினைத் தெரிவிப்பதுடன் தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் ஒவ்வொரு மாவட்டங்களிலும் நடத்தவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார் .

கடற்தொழிலாளர்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்தை உடனே பாராளமன்றில் கொண்டுவரவுள்ளதாகவும் இந்த போராட்டத்திற்கு சார்பாக மலையக பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் ஆதரவளிக்ககூடியவர்களை ஒருமித்து ஒரு கடிதத்தை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி கதைக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளதுடன்

எதிர்வரும் 12ஆம் திகதி மீன்பிடி அமைச்சர் முல்லைத்தீவு வருகின்றபோது ஒரு முடிவினை எட்டுகின்ற வாய்ப்பினை கொண்டு வருவதோடு பாராளுமன்றில் நாளை விசேட விவாதம் ஒன்றை கொண்டுவருவதோடு கடற்தொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் முல்லைத்தீவு வருகின்ற போது நாங்களும் வருவோம் என்றும் நாடாளுமன்றில் மீனவர் பிரச்சினைக்கு ஆதரவு தெரிவிக்கின்ற அனைவரையும் இணைத்து கவனயீர்ப்பு விவாதத்திற்கு கொண்டு வந்து விவாதிக்க முயற்சி எடுத்துள்ளோம் என்றும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.


இதையும் தவறாமல் படிங்க