வயல்வெளி அருகே இளம் ஆசிரியைக்கு நேர்ந்த கொடுமை: நீதிபதி இளஞ்செழியனின் அதிரடி!

  • Shan
  • August 07, 2018
422shares

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனால் இன்றைய தினம் இரண்டு குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

சில வருடங்களுக்கு முன்னர் ஆசிரியை ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காகவே இந்த இருவருக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் தெரியவருவதாவது,

கடந்த 2011.11.24 அன்று சம்பூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாட்டாளிபுரம் - சாந்தபுரம் ஆகிய இடங்களுக்கு இடையில் இளம் ஆசிரியை ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். குறித்த பகுதியில் உள்ள வயல் வெளிக்கு அருகில் மீட்கப்பட்ட இவரது சடலம், கொலை செய்யப்பட்டமைக்கான ஆதாரத்தைக் காட்டியது.

குறித்த ஆசிரியையிடமிருந்து காலை 6.45 மணியளவில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதுடன் அந்த கொள்ளையர்களால் அவர் கொலை செய்யப்பட்டிருந்தார்.

இதில் கட்டைப்பறிச்சான் பகுதியைச் சேர்ந்த குருகுலசிங்கம் ஸ்ரீவதனி (33 வயது) என்ற ஆசிரியையே கொல்லப்பட்டார்.

இது தொடர்பான தீவிர விசாரணைகளை மேற்கொண்டிருந்த பொலிஸார் நான்கு பேரைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரித்தனர்.

பாலசிங்கம் நகுலேஸ்வரன் (31 வயது), விஜயகுலசிங்கம் சந்திரபாலன் (21 வயது), கிருஷ்ணபிள்ளை சஜிவ்காந்தன் (25 வயது), சிவகுமரன் சிவரூபன் (20 வயது) ஆகியோரே சந்தேகிகளாக கைதாகினர்.

மூதூர் நீதவான் நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில், நீதவானால் திருகோணமலை மேல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்தப்பட்டது.

இதன்பின்னர் தொடர்ந்த வழக்கு மற்றும் விசாரணைகளில் முதலாம், இரண்டாம் சந்தேக நபர்கள் குறித்த ஆசிரியையைக் கோரமாக படுகொலை செய்தமை தெரியவந்தது.

குறித்த ஆசிரியையின் உடலில் பதின்மூன்று காயங்கள் காணப்பட்டதுடன் அவரது நகைகளும் களவாடப்பட்டிருந்தன.

இதன்படி வழக்கின் தீர்ப்பெழுதும் நாளாக இன்றைய தினம் குறிக்கப்பட்டது.

பாலசிங்கம் நகுலேஸ்வரன் மற்றும் விஜயகுலசிங்கம் சந்திரபாலன் ஆகிய சந்தேகிகள் இந்த பாதகத்தை மேற்கொண்ட குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டனர்.

எவ்வாறாயினும், கிருஷ்ணபிள்ளை சஜிவ்காந்தன், சிவகுமரன் சிவரூபன் ஆகிய சந்தேகிகள் நீதிபதியால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் திருமணமொன்றில் குழப்பம்: மண்டபத்தை விட்டு பாய்ந்தடித்து ஓடிய மணமகன்!

சற்றுமுன் திருமணமொன்றில் குழப்பம்: மண்டபத்தை விட்டு பாய்ந்தடித்து ஓடிய மணமகன்!

புலம்பெயர் தமிழர்கள் கண்டிப்பாக பார்க்கவேண்டிய ஒரு வீடியோ!!

புலம்பெயர் தமிழர்கள் கண்டிப்பாக பார்க்கவேண்டிய ஒரு வீடியோ!!

ராஜிவ் காந்தி கொலை வழக்கு தமிழர்கள் விடுதலை தொடர்பாக முன்னாள் நீதிபதி வெளியிட்டுள்ள புதிய தகவல்!

ராஜிவ் காந்தி கொலை வழக்கு தமிழர்கள் விடுதலை தொடர்பாக முன்னாள் நீதிபதி வெளியிட்டுள்ள புதிய தகவல்!