பொல்கஹவெல புகையிரத விபத்தால் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை!

19shares
Image

பொல்கஹவெல, பனலிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற புகையிரத விபத்து தொடர்பில் நால்வர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

தரித்து நின்ற புகையிரதத்துடன் மோதிய ரம்புக்கணை புகையிரதத்தின் சாரதி, சாரதி உதவியாளர், காவலர், துணைக் காவலர் ஆகியோரே இவ்வாறு தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பொல்காவலை புகையிரத நிலையத்தின் பனலிய பிரதேசத்திற்கு அருகில் நேற்று இரண்டு புகையிரதங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 23 பேர் காயமடைந்தனர்.

கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த புகையிரதம் ஒன்று, பிற்பகல் 4.35 அளவில் சமிக்ஞை விளக்குகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பொல்காவலை புகையிரத நிலையத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளது.

இதன்போது கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பட்ட மற்றுமொரு அலுவலக புகையிரதம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குறித்த புகையிரதத்துடன் மாலை 6.30 அளவில் மோதியுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த 32 பேரும் குருநாகல், பொல்கஹவெல, றம்புக்கனை மற்றும் கேகாலை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்த விசாரணைகளுக்கு, புகையிரத பொது முகாமையாளரின் தலைமையிலான மூவரடங்கிய குழுவொன்றை நியமிக்குமாறும் போக்குவரத்து அமைச்சர் மேலும் பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்நிலையில் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

விபத்தை ஏற்படுத்திய புகையிரத சாரதியை சேவையிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தி, விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ரயில்வே பொது முகாமையாளர் எஸ்.எம். அபேவிக்ரமவிற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ள நிலையில் புகையிரத விபத்து தொடர்பில் நால்வர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புகையிரதத்துடன் மோதிய ரம்புக்கணை புகையிரதத்தின் சாரதி, சாரதி உதவியாளர், காவலர், துணைக் காவலர் ஆகியோரே இவ்வாறு தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பில் புகையிரத பொது முகாமையாளரின் தலைமையிலான மூவரடங்கிய குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க