ரயில் சாரதிகளுக்கு இவ்வளவு சம்பளமா? கேட்டாலே தலைசுற்றி விழுவீர்கள்!

  • Shan
  • August 10, 2018
682shares

இலங்கையின் தொடருந்து ஓட்டுநர்களுக்கு மாதாந்தம் மிகப்பெரிய ஊதியம் செல்வதாக அரசாங்கத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் உண்மையைக் கசியவிட்டுள்ளார்.

இதன்படி மேலதிக கொடுப்பனவுகள் உட்பட மாதாந்தம் 4 லட்சம் ரூபாவிற்கும் அதிகமான சம்பளத்தை பெறுவதாக சிவில் விமான சேவைகள் மற்றும் போக்குவரத்து பிரதியமைச்சர் அபயசிங்க சுக்காட்டியுள்ளார்.

மேலும் ஏனைய அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான ஆணைக்குழு அமைக்கப்படவுள்ளது என்றும் அவர் கூறினார்.

தொடருந்து தொழில்சங்க நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அசோக அபயசிங்க தெரிவித்துள்ளார். ரெயில்வே ஓட்டுநர்கள் கூடுதலான சம்பளத்தை பெறும் நிலையில் மேலும் சம்பள அதிகரிப்புக் கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது நியாயமற்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதையும் தவறாமல் படிங்க