புகையிரத இயலாமையை புகைக்கவிட்ட சம்பவம்! (வைரலாகிவரும் புதிய படங்கள்)

  • Shan
  • August 10, 2018
31shares

நாட்டில் ஸ்தம்பித்துப்போயுள்ள தொடருந்துச் சேவை பல அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்களும் பதிவாகிவருகின்றன.

குறிப்பாக தொடருந்துக்களின் ஓட்டம் இன்மையால் தொடருந்துச் சுவடுகள் மக்களின் பல்வேறு பாவனைகளுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களின் தென்னிலங்கையைச் சேர்ந்த பலரும் கருத்துக்களைக் கூறிவருகின்றனர்.

அந்தவகையில் தென்னிலங்கையில் ஒரு பிரதேசத்தில் நடந்த சம்பவம் ஒன்று பலரால் பகிரப்பட்டுவருகின்றது.

தொடருந்துச் சுவட்டின் நடுவே மேசை வைத்து அதில் கரம் விளையாட்டை விளையாடும் சில நபர்களின் படங்கள் இணையங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பரவியுள்ளன.

அந்த வழியால் சென்றுகொண்டிட்ருந்த பொதுமகன் ஒருவர் இந்தச் சம்பவத்தை படம்பிடித்து தனது முகநூலில் முற்படுத்தியுள்ளார்.

இலங்கையின் தொடருந்துச் சட்டத்தின்படி தொடருந்துச் சுவட்டில் அனுமதியின்றி நடப்பதோ உட்கார்ந்திருப்பதோ தண்டனைக்குரிய குற்றமாகும்.

இந்த நிலையில் குறித்த சுவட்டில் இருந்து குறித்த நபர்கள் விளையாடுவது இந்த நாட்டின் போக்குவரத்து ஸ்திரமின்மையையே காட்டுவதாக ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுபோன்ற செயற்பாடுகள் மக்களைத் தவறான பாதையில் இட்டுச்செல்லக்கூடியது என எச்சரித்திருக்கும் மற்றுமொருவர் இதற்கு தொடருந்துத் திணைக்களம் உரிய நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

எவ்வாறாயினும் இலங்கை தொடருந்துச் சேவையின் இயலாமையினையும் பொறுப்பற்ற தன்மையினையும் எடுத்துச் சொல்வதற்ககவே அவர்கள் இவ்வாறு நடந்துகொண்டனர் என பலரும் தமது கருத்துக்களைக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதையும் தவறாமல் படிங்க