பிரச்சினையின் சூத்திரதாரி இவரா? அரசாங்கத்துக்கும் எச்சரிக்கை!

  • Shan
  • August 10, 2018
32shares

தொடருந்து ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு முறையான தீர்வினைப் பெற்றுக்கொடுக்காவிட்டால் தற்போது சேவையில் ஈடுபடும் 8 புகையிரத சேவைகளும் நாளைமுதல் நிறுத்தப்படும் என தொடருந்து தொழிற்சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

”காலை, மாலை என 8 அலுவலக தொடருந்து சேவைகள் இடம்பெறுவதற்கு தொடருந்து திணைக்களம் நடவடிக்கை எடுத்தது. இவ்வாறான நிலையில் எமது கோரிக்கைக்கு திர்வு கிடைக்காவிடின் நாளையிலிருந்து அந்த 8 தொடரூந்து சேவையும் இடைநிறுத்தப்படும்” என கடும் எச்சரிக்கையை அவர் விடுத்துள்ளார்.

இதேவேளை, இந்த இந்திக்க தொடங்கொட என்பவரே வேலை நிறுத்தத்தின் சூத்திரதாரி என்றும் இவரது மாதாந்த சம்பளம் இரண்டு லட்சத்து எழுபத்தையாயிரத்து இருநூற்று எழுபத்தொன்பது (275 279) ரூபா என தெரியவந்துள்ளது.

இலங்கையில் சாரதி ஒருவர் மாதமொன்றுக்கு 2 இலட்சம் ரூபா சம்பளம் பெறுவதுடன் 500 மணித்தியாலங்கள் மேலதிக நேரக் கொடுப்பனவையும் பெற்றுக் கொள்கின்றனர் என கூறப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க