கூட்டமைப்பு பெண் ஆதரவாளரின் உந்துருளி எரிப்பு!

21shares
Image

வாதரவத்தைப் பகுதியில் உள்ளூராட்சித் தேர்தல் காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவாக தொடர் பணியில் ஈடுபட்ட ஓர் பெண்மணியின் மோட்டார் சைக்கிள் நேற்று அதிகாலையில் விசமிகளால் தீ வைத்து கொழுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் வாதரவத்தையில் உள்ள குறித்த வீட்டில் இருந்த அனைவரும் உறக்கத்தில் இருந்த சமயமே இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிகாலை ஒரு மணியை தாண்டிய நிலையில் வீட்டின் முகப்பில் திடீரென வெளிச்சம் தெரிவதனை அவதானித்துள்ளனர். இதனால் நிலமையை அறியாத வீட்டார் உடனடியாக மின் விளக்குகளை ஒளிரவிட்டு வெளியே ஓடி வந்துள்ளனர்.

இதன்போது மோட்டார் சைக்கிள் பற்றி எரிந்த வண்ணம் இருந்துள்ளது. இதனையடுத்து உடனடியாக மோட்டார் சைக்கிளில் பற்றிய தீயை அணைக்க முயன்றுள்ளனர். இருப்பினும் தீயை அணைப்பதற்கு முன்பே மோட்டார் சைக்கிள் பாரிய சேதமடைந்து பாவனைக்கு உதவாத வகையில் அழிவடைந்துள்ளது.

இவ்வாறு வீட்டார் தீயை அவதானித்து வெளியே ஓடி வந்த சமயம் வீதியில் நின்ற மோட்டார் சைக்கிள்கள் அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும் சத்தமும் கேட்டுள்ளது. இதனையடுத்து வீட்டார் தேடுதலில் ஈடுபட்ட சமயம் ஓர் பெற்றோல் போத்தல் மற்றும் தீப்பெட்டி என்பன காணப்பட்டதோடு வீட்டின் பாதுகாப்பு வேலியும் பிரிக்கப்பட்டு காணப்பட்டதனால் குறித்த செயல் ஓர் நாசகாரச் செயல் என்பதனை உறுதி செய்தனர்.

இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளதோடு சிலர் சந்தேக நபர்களாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதனையடுத்து பொலிசார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க
ஜெயலலிதாவுக்காக எரித்து கொல்லப்பட்ட 3 மாணவிகள் - ஓர் நினைவுப்பகிர்தல்.!

ஜெயலலிதாவுக்காக எரித்து கொல்லப்பட்ட 3 மாணவிகள் - ஓர் நினைவுப்பகிர்தல்.!

விடிந்தால் கல்யாணம்; மணமக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

விடிந்தால் கல்யாணம்; மணமக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

இலங்கையில் திருமண பந்தத்தில் இணைந்த தம்பதிகளுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி!

இலங்கையில் திருமண பந்தத்தில் இணைந்த தம்பதிகளுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி!