மக்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்! அடுத்தமாதத்திலிருந்து நடைமுறை!

  • Shan
  • August 10, 2018
191shares

ஸ்ரீ லங்காவின் தேசிய அடையாள அட்டையை விநியோகிக்கும் பொழுது அறவிடும் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டணம் இறுதியாக 1980ம் ஆண்டில் திருத்தப்பட்டதாக ஆட்பதிப்பு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் தெரிவித்துள்ள அவர்,

”தற்பொழுது தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ளும் பொழுது அறவிடப்படும் கட்டணம் மூன்று ரூபா ஆகும். இது நூறு ரூபாவால் அதிகரிக்கிறது. தேசிய அடையாள அட்டையில் திருத்தத்தை மேற்கொள்ளும் போது அதற்காக அறவிடப்படும் கட்டணம் 15.௦௦ ரூபா ஆகும். அத்தோடு இத்தொகை 250 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது. மீண்டும் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளும் பொழுது அதற்காக 500 ரூபா கட்டணம் அறவிடப்படும். தற்போது இந்த கட்டணம் 15 ரூபா ஆகும். புதிய கட்டணம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேசிய அடையாள அட்டை தொடர்பான புதிய கட்டண முறை செப்டெம்பர் முதலாம் திகதியில் இருந்து அமுல்படுத்தப்படவுள்ளது.” என்றார்.

இதையும் தவறாமல் படிங்க