வட மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் கைது!

51shares

வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் சற்றுமுன்னர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரச சொத்துக்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டிலேயே பிற்பகல் 2.45 அளவில் இவரைக் கைது செய்துள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவில் தொடரும் சட்டவிரோத மீன்பிடி தொழிலை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தி ஆயிரக்கணக்கான மீனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கடந்த 2 ஆம் திகதி கண்டனப் பேரணியை மேற்கொண்டிருந்தனர்.

பேரணியின் நிறைவில் மாவட்ட கடற்தொழில் நீரியல் வள திணைக்கள அலுவலகத்தினை சென்றடைந்த மீனவர்களும், அவர்களது குடும்பத்தினரும், குறித்த அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீரியல் வள திணைக்கள உதவிபணிப்பாளர் தம்மை சந்திக்க வேண்டும் என வலியுறுத்தி நீண்டநேரமாக காத்திருந்த போதிலும் மக்களை எவரும் சந்திக்காத நிலையில் ஆத்திரம் அடைந்த மக்கள் பொலிஸாரின் தடைகளையும் மீறி வேலிகளை உடைத்து திணைக்களத்தினுள் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள்.

இதன்காரணமாக அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் உபகரணங்கள் சேதமாக்கப்பட்டதுடன், அலுவலகத்தின் சுற்றுவேலியும் முற்றாக தகர்க்கப்பட்டது.

இந்நிலையிலேயே அரச சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியமை, கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்தின் கட்டிடத்தை சேதப்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன் அவரை முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க
ஜெயலலிதாவுக்காக எரித்து கொல்லப்பட்ட 3 மாணவிகள் - ஓர் நினைவுப்பகிர்தல்.!

ஜெயலலிதாவுக்காக எரித்து கொல்லப்பட்ட 3 மாணவிகள் - ஓர் நினைவுப்பகிர்தல்.!

விடிந்தால் கல்யாணம்; மணமக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

விடிந்தால் கல்யாணம்; மணமக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

இலங்கையில் திருமண பந்தத்தில் இணைந்த தம்பதிகளுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி!

இலங்கையில் திருமண பந்தத்தில் இணைந்த தம்பதிகளுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி!