அமைச்சரின் வீட்டு திட்டத்தில் நடந்த சோகம் எட்டு வயது சிறுமி பலி; பிரபல மண் வியாபாரி கைது?

67shares

மட்டக்களப்பு தன்னாமுனை காமாச்சிபுரம் வீட்டு திட்ட கிராமத்தில் வெட்டப்பட்டிருந்த குளத்தில் விழுந்த எட்டு வயது சிறுமி பரிதாபமாக பலியாகியுள்ளது.

குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்வரும் 13 திகதி தங்களுக்காக கட்டப்பட்ட புதிய வீட்டில் குடியேறும் கனவுடன் கல்லடியில் இருந்து வந்த அனுரஞ்சித் அனுசேராஅசேல் என்ற எட்டு வயது சிறுமியே இவ்வாறு பலியாகியுள்ளார்.

இந்த சிறுமியின் மரணத்திற்கு காரணம் மண்ணை விற்கும் கொள்ளையர்களின் பணத்தாசையால் காமாட்சி கிராமத்தில் இரவோடு இரவாக வெட்டப்பட்ட குளமே என தெரியவந்துள்ளது.

சிறுமியின் உயிரை பறிப்பதற்கு காரணமான முன்னாள் கருணா குழு உறுப்பினரும் த‌ற்போதைய பிரபல மண் தாதாவான ஞானப்பிரகாசம் யூலியன் ஜொய் பிரகஷ் என்பவரை பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சம்பவத்தில் பலியான சிறுமி மட்டக்களப்பு கல்லடி விவேகானந்தா மகளீர் கல்லூரியில் தரம் 3 கல்வி கற்கும் மாணவியாகும்.

மட்டக்களப்பு தன்னாமுனை காமாச்சிபுரம் வீட்டு திட்டத்தை திறந்து வைப்பதற்காக எதிர்வரும் 13.08.2018 அன்று அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள் வருகை தரவுள்ள நிலையில் குறித்த வீட்டுத்திட்ட கிராமத்தின் நடுவில் சிறிய குளம் அமைக்கும் பணி ஆரம்பித்துள்ளனர்.

சவுக்கடி மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் பெயரில் சுமார் 10 இலட்சம் ரூபாய் பெருமையில் அமைக்கப்பட இருக்கும் இந்த குளத்திற்கான ஒப்பந்த வேலையினை பிரபல மண் தாதாவான ஞானப்பிரகாசம் யூலியன் ஜொய் பிரகஷ் என்பவரிடம் வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சரின் வருகைக்காக அவசர அவசரமாக குளம் தோன்டப்பட்ட நிலையில் அங்கு விற்பனைக்கு உகந்த மண் இருந்தமையினால் இரவோடூ இரவாக இயந்திரங்களை கொண்டு அங்குள்ள நிலத்தை அளவுக்கு அதிகமான ஆழத்திற்கு தோன்டி அங்கிருந்த மண்ணை இரவோடு இரவாக ஏற்றியுள்ளனர்.

அடுதநாள் காலை தாங்கள் குடியேற இருக்கும் வீட்டை துப்பரவு செய்ய தங்களது பெற்றோருடன் வந்த சிறுமி தோன்டப்பட்டிருந்த குளத்தின் அருகில் விளையாடிய போது தவறுதலாக குளத்திற்குள் விழுந்துள்ளது. சம்பவ நடந்த நேரத்தில் குளம் அமைக்கும் ஒப்பந்த காரர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் அந்த இடத்தில் இருந்தும் சிறுமி குளத்தில் விழுந்ததை கவனிக்கவில்லை.

இதேநேரம் குழந்தையுடன் விளையாடிய சிறுவர்கள் மூவரில் ஒருவர் குளத்திற்குள் விழுந்த சிறுமியை தூக்கி எடுத்துள்ளனர். இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த பெற்றோர் சிறுமியை மோட்டார் சைக்கிளில் வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற போதும் சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். என தெரிவித்துள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க