ஈழத்திலேயே சிவனுடைய இலிங்கத்தை வழிபட தடையா?

48shares

வவுனியா ஒலுமடு கிராமத்தின் வெடுக்குநாரி மலை பகுதியில் பொதுமக்கள் வழிபாடுகளில் ஈடுபட தொல்பொருள் திணைக்களம் தடைவிதித்துள்ளது

தொல்பொருள் திணைக்களத்தினால் விதிக்கப்பட்ட தடையுத்தரவிற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தமது கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.

வவுனியா வடக்கு பிரதேசத்தின் ஒலுமடு கிராமத்தில் இருந்து சற்றுதொலைவில் தமிழரின் பூர்விக பிரதேசமான வெடுக்ககுநாரி மலை அமைந்துள்ளது

குறித்த மலைப்பகுதியில் ஆதி லிங்கேஸ்வரர் என்ற சிவனுடைய இலிங்கம் காணப்படுவதுடன் ஒவ்வோரு வெள்ளிக்கிழமைகளிலும் அப்பகுதி மக்கள் குறித்த ஆலயத்திற்கு சென்று பூஜை வழிபாடுகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் கடந்தவாரமளவில் தொல்பொருள் திணைக்களத்தால் குறித்த மலைக்கு பொதுமக்கள் சென்று வழிபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

அத்துடன் மக்கள் வழிபாட்டிற்கு அனுமதியளிக்க முடியாது என நெடுங்கேணி பொலிஸ் நிலையத்திலும் தொல்பொருள் திணைக்களத்தால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

இது தொடர்பில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தமது எதிர்பை வெளியிட்டதுடன், இந்த விடயம் தொடர்பில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.

இதனையடுத்து வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எச்.எம்.கனிபா தொல்பொருள் திணைக்களத்தினருடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இதேவேளை, தமிழரின் பூர்விக பகுதிகளை தொல்பொருட்திணைக்களம் மற்றும், வனவளதிணைக்களம் உரிமை கோரி வருவதாக மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் நா்டாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனால் கடும் விசனம் தெரிவிக்கபட்டிருந்தது.

இந்நிலையில் தமிழரின் தொல்பொருள் முக்கியத்துவம் தொடர்பில் உரிய அமைச்சின் கவனத்திற்கு கொண்டு வருவதுடன் ஜனாதிபதியுடனும் கலந்துரையாடுவதாக மன்னார் ஒருங்கிணைப்பு குழுவில் தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

இதையும் தவறாமல் படிங்க