யாழில் 27 தமிழர்களை உடனடியாக கைது செய்த ஸ்ரீலங்கா அரசபடை!

299shares

இராமேஸ்வரம் பகுதியில் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 27 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

அத்துடன், கைது செய்யப்பட்ட மீனவர்கள் மீது புதிய மீன்பிடி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், 4 படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராமேஸ்வரம், பாம்பன் மற்றும் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும்போது அவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி சிறை பிடிக்கப்படுவதும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் வாடிக்கையாக நடைபெற்று வருகிறது.

இலங்கை கடற்படையின் இத்தகைய நடவடிக்கைகளால் தமிழக மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 27 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று (10.08.2018) கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க