தமிழர் தாயகத்தில் மீண்டும் சிங்கள மகா வித்தியாலயம்!

  • Shan
  • August 26, 2018
49shares

யாழ்ப்பாணத்தில் மீண்டும் சிங்கள மகா வித்தியாலயத்தினை ஆரம்பிப்பதன் ஊடாக நாட்டில் நல்லிணக்கத்தினை உருவாக்க முடியும் என அந்த பாடசாலையின் பழைய மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலுள்ள சிங்கள மகா வித்தியாலயத்தினை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 53 ஆண்டுகளுக்கு முன்னர் யாழில் சிங்கள மகா வித்தியாலம் திறக்கப்பட்ட நிலையில் 1953 இல் தனிச் சிங்கள சட்டம் கொண்டு வரப்பட்டது.

அதற்குப் பின்னர் 1965 ஆம் ஆண்டு யாழில் சிங்கள மகா வித்தியாலயம் நிறுவப்பட்டது. ஆனாலும் போர்ச் சூழல் காரணமாக 1985 ஆம் ஆண்டு மூடப்பட்டது.

இந்நிலையில் யாழில் இருந்த சிங்கள மகா வித்தியாலய கட்டடம் ஸ்ரீலங்கா இராணுவத்தின் முகாமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இவ்வாறான சூழலில் சிங்கள மகா வித்தியாலயத்தினை 33 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் திறப்பதற்குரிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த முயற்சியை யாழ்.சிங்கள மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கம் மற்றும் ஆசிரியர் கூட்டமைப்பு ஆகியன இணைந்து முன்னெடுத்துள்ளன.

இது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

கலந்துரையடலில் பாடசாலையின் முன்னாள் அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது இப் பாடசாலையின் கடந்த கால செயற்பாடுகள் மற்றும் அதன் நிலைமைகள் குறித்து பேசப்பட்டு தொடர்ந்து அதனை இயங்க வைக்க முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

குறிப்பாக எல்லான.,னங்களும் ஒன்றாக இணைந்து செயற்பட்ட பாடசாலையை மீளவும் சகல இனங்களையும் இணைத்துக் கொண்டு ஆரம்பிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் முதற் கட்டமாக சிங்கள மகா வித்தியாலயத்தினை ஆரம்பிக்க வேண்டும் என பழைய மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுபாட்டில் இருந்த கிளிநொச்சி சிங்கள மகா வித்தியாலயம் 1990 களின் பின்னரும் இயங்கி வந்தது.

கிளிநொச்சியில் ஏற்பட்ட யுத்த சூழலினால் அது மூடப்பட்டபோதும் அதன் அதிபராக பணியாற்றிய பௌத்த மதகுரு இறுதி யுத்தம் வரை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க