அடுத்த யுத்தத்திற்கு ஸ்ரீலங்காவை படைத்தளமாக மாற்றும் அமெரிக்கா!

278shares
Image

மற்றுமொரு உலக மகா யுத்தமொன்று ஏற்பட்டால் அதன்போது தனது பிரதான படைத் தளமாக ஸ்ரீலங்காவை மாற்றுவதற்கான தந்திரத்தில் அமெரிக்கா தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணி தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் இந்த சூழ்ச்சியில் ஸ்ரீலங்கா சிக்கிவிட்டதாகவும், இதற்கான ஆயத்த நடவடிக்கைகளின் ஒன்றாகவே அமெரிக்கக் கடற்படையினர் ஸ்ரீலங்கா படையினருடன் இணைந்து திருகோணமலை துறைமுகத்தில் போர்ப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் மஹிந்தவாதியான நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார குற்றம்சாட்டியுள்ளார்.

ஒன்றிணைந்த எதிரணிக்கு ஆதரவளித்துவரும் சோஷலிச மக்கள் முன்னணி ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் நேற்று நடைபெற்றது.

அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான மிகப்பெரிய போர்க் கப்பல் கடந்த வாரம் திருகோணமலை துறைமுகத்தை சென்றடைந்ததோடு அங்கு ஸ்ரீலங்கா கடற்படையும், அமெரிக்கக் கடற்படையும் இணைந்து போர்ப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் இன்றைய ஊடக சந்திப்பில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, ஸ்ரீலங்கா மிக ஆபத்துமிக்க இடத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பதாகவும், அதற்கு முன்னரே ரணில் - மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசை வீட்டிற்கு அனுப்பிவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்