தமிழ் மாணவனின் மண்டையை உடைத்த ஆசிரியர்; வகுப்பறையில் நடந்த பயங்கரம்!(வீடியோ இணைப்பு)

  • Sethu
  • September 06, 2018
428shares

மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியரின் தாக்குதலுக்கு உள்ளான மாணவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது

மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி மத்தியகல்லூரியில் கணித ஆசிரியராக கடமைபுரியும் ஏறாவூரை சேர்ந்த உஸைன் எனும் கணிதபாட ஆசிரியர் செங்கலடியைச்சேர்ந்த பத்தாம் தரத்தில் படிக்கும் மாணவன் ஒருவரை நெற்றியில் பலகையால் தாக்கியுள்ளார்.

குறித்த மாணவன் கணிதபாட புத்தகம் பாடசாலைக்கு கொண்டுசெல்லாமையினாலே இவ்வாறு கண்மூடித்தனமாக தாக்கப்பட்டுள்ளார். ஆசிரியர் பலகையால் தாக்கியதால் மாணவனிற்கு நெற்றியில் எட்டு தையல் போடப்பட்டு தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

மாணவர்கள் இடும் தவறுகளை தண்டிப்பதை நாம் ஏற்கவேண்டும் ஆனால் இவ்வாறான கண்மூடித்தனமான தாக்குதல்களை ஒருபோதும் ஏற்க முடியாது.

தற்போது அந்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இந்த விடயம் தொடர்பாக சம்மந்தப்பட்ட வலைய கல்விப்பணிப்பாளர் கவனத்துக்கும் மாணவனின் பெற்றோர் முறையிட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இதையும் தவறாமல் படிங்க