யாழ்ப்பாணத்தில் சிக்கிய அபூர்வ விலங்கு! புலி இனத்தைச் சேர்ந்ததாம்? (படங்கள் காணொளி)

  • Shan
  • September 07, 2018
835shares

சுழிபுரம் சவுக்கடி கடற்பகுதியில் அரிய வகை உயிரினம் ஒன்று மீனவரின் வலையில் சிக்குண்டுள்ளது.

சருகுப் புலி என அழைக்கப்படும் இது உயிருடன் உள்ளதாக கூறப்பட்டுள்ளதுடன் இன்று காலை 6 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சுழிபுரத்தைச் சேர்ந்த முருகானந்தன் என்ற மீனவர் இன்று அதிகாலை தொழிலுக்குச் சென்று தனது மீன் கூட்டை இழுத்துள்ளார். அதன் எடை கனமாக இருந்துள்ளதனால் நன்றாக அவதானித்த போது, சிறுத்தைப் புலி போன்ற ஒன்று காணப்பட்டுள்ளது.

அதனைக் கரைக்கு கொண்டு வந்த குறித்த மீனவர், சக மீனவர்களுக்கும் கடற்படையினருக்கும் அறிவித்தார்.

கடற்படையினருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில், அவர்களால் வன உயிரினங்கள் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சருகுப் புலி எனப்படும் குறித்த விலங்கு யாழ்ப்பாணத்தில் உள்ள பற்றைக் காடுகளில் வாழ்விடங்களை அமைத்துள்ளதுடன் சுழிபுரம் மற்றும் பொனாலைக் காட்டில் மறைவாக வாழ்வதாக கூறப்பட்டுள்ளது.

சுழிபுரத்தில் சிக்கிய அபூா்வ உயிரினம்

இதையும் தவறாமல் படிங்க