பூஜித் ஜயசுந்தர மற்றும் பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர் விசாரணைக்கு அழைப்பு!

12shares

ஸ்ரீலங்காவில் விமர்சனத்திற்கு உள்ளாகிவரும் பொலிஸ் மா அதிபர் புஜித் ஜயசுந்தர மற்றும் பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அரசியலமைப்பு பேரவைக்கு விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒழுங்குவிதிகளை நிறைவேற்றாமையினால் இவர்கள் இன்று விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழு 10 ஒழுங்குவிதிகளை நிறைவேற்றுமாறு பொலிஸ் மா அதிபர் மற்றும் அவரின் கீழ் பணியாற்றிய உறுப்பினர்களுக்கு பொறுப்பு வழங்கியிருந்தது.

எனினும் குறித்த ஒழுங்குவிதிகளை இதுவரை நடைமுறைப்படுத்தாமை காரணமாக, விசாரணை மேற்கொள்ள பொலிஸ் மா அதிபர் புஜித் ஜயசுந்தர மற்றும் பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இன்று அரசியலமைப்பு பேரவைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் ஜி.எச்.மனதுங்க, சபாநாயகர் கரூ ஜயசூரியவிற்கு கடிதம் ஒன்றின் மூலம் தெளிவுபடுத்தியதைத் தொடர்ந்தே இந்த அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளதாக தெரவிக்கப்படுகிறது.

அதனடிப்படையில் இன்று மாலை அவர்கள் அரசியலமைப்பு பேரவைக்கு வருகைதருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

19ஆம் அரசியலமைப்பு சீர்திருத்தங்களின் அடிப்படையில் சபாநாகர் கரு ஜயசூரியவின் தலைமையில் கூடவுள்ள அரசியலமைப்பு பேரவை 10 உறுப்பினர்களை உள்ளடக்கியுள்ள நிலையில், பிரதமர் ரணில் விக்கரமசிங்க மற்றும் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் இந்த சட்டமன்ற சபையில் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதையும் தவறாமல் படிங்க